கறவை மாடுகளில் சினை தங்காமையும் தீர்வுகளும்!

இனப்பெருக்க உறுப்புகளை தாக்கும் நோய்கள்:

இனப்பெருக்க உறுப்புகளை தாக்குகின்ற சில நோய்கள் பசுக்களின் மலட்டுத் தன்மையை ஏற்படுத்துகின்றன.

சினை சேர்க்கப்படும் காளையானது நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் பசுவின் கருப்பையில் புண் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே நோயுற்ற காளைகளை சினைக்கு பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

பசுக்கள் சுகாதாரமற்ற இடத்தில் கன்று ஈனும் போது நாம் சுகாதார முறைகளை பின்பற்றாமல் இருப்பதாலும் கருப்பையில் புண் ஏற்பட வாய்ப்புள்ளது.

கருப்பை புண் உ ள்ள மாடுகளில் பால் உற்பத்தி குறைய அதிக வாய்ப்பு உள்ளது.

கன்று ஈன்றபின் கருப்பையில் நஞ்சுக்கொடி தங்குதல், கருப்பை புண் ஏற்பட முக்கிய காரணமாக உள்ளது.

கன்று ஈன்ற 8 மணி நேரத்திற்குள் நஞ்சுக் கொடி விழவில்லை என்றால் அதற்கான சிகிச்சையை அளிக்க வேண்டும்.

இந்த நோய்களாலும் மாடுகளுக்கு மலட்டுத்தன்மை ஏற்பட வாய்ப்புள்ளது.

கனநீர் பற்றாக்குறை:

பசுக்கள் உரிய காலத்தில் சினைப்பருவத்திற்கு வந்து கருவுருவதற்கு பசுவின் உடலில் கணநீர் சரியான அளவில் இருப்பது அவசியமாகும்.

கண நீரின் அளவு குறையும் பொழுது பசுக்கள் கருவுறாமல் மலட்டுத் தன்மையை உண்டாக்குகிறது.

இதனால் பசுக்கள் சினை அடைந்தாலும், கருவை முழுமையாக பாதுகாக்க முடியாமல் கரு கலைந்துவிடும்.

இதனை தவிர்க்க கால்நடை மருத்துவரை கொண்டு தகுந்த சிகிச்சை அளிக்கலாம்.

நிரந்தர மலட்டுத் தன்மை:

நிரந்தர மலட்டுத் தன்மை என்பது கறவை மாடுகளில் 5 முதல் 10 சதவீதம் வரை காணப்படும்.

இதற்கு முக்கிய காரணம் பசுக்களில் இனப்பெருக்க உறுப்பு கோளாறுகள் ஏற்படுவதாகும்.

விந்தனு ,சினைமுட்டை ஆகியவற்றில் உள்ள மரபணுக்களில் அழிவு குணங்கள் இருந்தால் கருவுறுதல் பாதிக்கப்படும்.

வயது முதிர்ந்த பசுக்கள் மற்றும் காளைகள் குறைபாடுள்ள விருந்தினை உருவாக்குவதால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது.

சினைப்பருவ ஒருங்கிணைந்த தொழில்நுட்பம்:

சிகிச்சைக்குப் பிறகும், பருவத்திற்கு வராத கிரேடரிகள் , சினை பிடிக்காத பசுக்களில் சினைப்பருவ ஒருங்கிணைந்த தொழில்நுட்பம் மூலம் சினைபிடிக்கும் திறனை அதிகரிக்கலாம்.

இம்முறையில் ஹார்மோன்களை பயன்படுத்தி பருவ ஒருங்கிணைப்பு செய்து குறிப்பிட்ட நாளில் செயற்கை முறை கருவூட்டல் செய்து சிறைப் பிடிக்கும் திறன் அதிகரிக்கலாம்.

இம்முறையில் சினை மாடுகளில் ஏற்படும் மலட்டுத் தன்மையை நீக்கி பெரும்பாலான பசுக்களை கருவுறச் செய்து லாபம் பெற முடியும்.

 

 

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories