கறவை மாடுகளில், பால் உற்பத்தியை அதிகரிக்க எளிய வழிமுறை!

விவசாயத்திற்கு பெரிதும் உதவி வருபவை, கால்நடைகள் (Livestock). அந்த வகையில், கறவை மாடுகள் (Dairy cows) பால் உற்பத்தியில், பெரும்பங்காற்றி வருகிறது.
கால்நடைகளை வளர்ப்பவர்களும், வளர்க்க ஆசைப்படுபவர்களும் பால் உற்பத்தியை அதிகரிக்கவே விரும்புவார்கள். முன்பெல்லாம், அதிக எண்ணிக்கையில் அதிகமானோர் பசுக்களை, வளர்த்து வந்தனர். ஆனால், தற்போது, பசுக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதற்கெல்லாம், முக்கிய காரணம், செலவு அதிகரித்தும், பால் உற்பத்தி குறைந்தும் இருப்பதே ஆகும். கறவை மாடுகளில், பால் உற்பத்தியை (Milk production) அதிகரிக்கும் சில வழிமுறைகளையும், செய்யக்கூடாத செயல்கள் பற்றியும், இங்கு தெரிந்துகொள்வோம்.

பால் உற்பத்தியை அதிகரிக்கும் வழிகள்:
கன்று ஈன்ற பின், சோயா, மொச்சைக் கொட்டை மற்றும் பருத்திக் கொட்டை கொடுத்தால் பால் உற்பத்தி அதிகரிக்கும். தீவனத்தை இரண்டு வேளை தருவதற்கு பதிலாக, நான்கு வேளையாக பிரித்துக் கொடுக்க வேண்டும். கன்று ஈன்ற பிறகு 85 நாட்கள் கழித்து, கறவை மாட்டுக்கு, சினை ஊசி (Chin injection) போடவேண்டும். மாடு சினையானால் பால் உற்பத்தி பாதிக்கப்படும். ஒரு லிட்டர் பால் உற்பத்தியாவதற்கு, 3 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. 10 லிட்டர் பால் கறக்கும் மாடுகளுக்கு, 30 லிட்டர் தண்ணீர் தேவைப்படும். எனவே சுத்தமான குடிநீரை குறையில்லாமல், கொடுக்க வேண்டும். மேலும், மக்காச்சோளம் மற்றும் சோளம் கலந்த உணவுகளை அடிக்கடி தர வேண்டும்.

செய்யக்கூடாத செயல்கள்:
தேவைக்கு அதிகமான புரதச் சத்துள்ள தீவனங்களை (Feeds) கொடுத்தால், மாட்டின் வயிற்றில் அமோனியா (Ammonia) வாயு உற்பத்தியாகும். இந்த அமோனியா ரத்தத்தில் கலந்து, கருப்பையில் கசியும். இதனால் சினையும் பாதிக்கப்படும். கறவை மாடுகளுக்கு அளவுக்கு அதிகமான தானியங்களையும், புளித்த தண்ணீரும் கொடுத்தால் அமிலநோய் ஏற்படும். இதனால் பால் உற்பத்தியும், கொழுப்புச்சத்தும் குறையும். பால் கறக்கும் போது மாடுகளை அடித்தாலோ, துன்புறுத்தினாலோ, அட்ரினலின் (Adrenaline) என்ற ஹார்மோன் சுரந்து பாலின் உற்பத்தியை குறைத்து விடும்.

பசுந்தீவனம்:
இளம்பயிர்களை உணவாக கொடுத்தால் பாலில் கொழுப்புச்சத்து குறையும். முற்றிய பயிர்களில் ஆக்சலேட் சத்து அதிகமாக இருக்கும். இதை உணவாக சாப்பிடும் போது கால்சியம் (Calcium) சத்து உடலுக்கு கிடைக்காமல், கால்சியம் ஆக்சலேட் (Oxalate) ஆக, சாணத்துடன் வெளியேறும். எனவே பசுந்தீவனங்களை (Green fodder) 45 நாட்களுக்கு ஒருமுறை அறுவடை செய்து தீவனமாக தரவேண்டும். பசுந்தீவனம், பால் உற்பத்தியை சீரான அளவில் அதிகரிக்க வல்லது. பால் உற்பத்தியை அதிகரித்து விட்டால், நிச்சயம் நல்ல இலாபம் கிடைக்கும். கறவை மாடுகளை, கனிவோடு பார்த்துக் கொள்வது மிக அவசியம்.

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories