கறவை மாடுகள் சினை பிடிக்காமல் இருப்பது என்பது மாடு வளர்க்கும் அனைவருக்கும் உள்ள பொதுவான பிரச்சனையாகும்.

பால் வற்றிய காலத்தில் சினையில்லா பசுவிற்கு தீவனம் அளிப்பது பொருளாதார நஷ்டத்தை உண்டாக்கும். இப்பொருளாதார நஷ்டத்தைத் தவிர்க்க, மாடு சினை பிடிக்காமல் இருப்பதற்கான காரணங்களையும் அதை நிவர்த்தி செய்வதற்கான வழிமுறைகளையும் நாம் தெரிந்து கொள்வது அவசியம்.

சினை பிடிக்காததற்கான காரணங்களை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.

1. பராமரிப்பு முறைகளில் உள்ள குறைபாடுகள்

தீவன பற்றாக்குறை (குறிப்பாக தாது உப்புக்கள்) அறிகுறி இல்லாத பருவம் (பருவத்திற்கான அறிகுறிகளைக் காட்டாமலே மாடுபருவத்திற்கு வந்து போவது) பருவத்தைக் கண்டறியாமல் தவறி விடுவது.சரியான நேரத்தில் சினை ஊசிபோடாதது.

2. இயற்கையான குறைகள்

இனப்பெருக்க உறுப்பில் நோய் / புண் அல்லது கட்டி இருந்தால், கன்றுவீச்சு / கருச்சிதைவு நோய் இருந்தால், ஹார்மோன் கோளாறுகள், மரபியல் கோளாறுகள் மற்றும் கடந்த முறைகன்று ஈன்றதில் கோளாறுகள்.

3. விந்து மற்றும் சினை ஊசி போடுவதில் உள்ளகுறைபாடுகள்

சரியான நேரத்தில் சினை ஊசி போடாதது. சரியான முறையில் சினை ஊசி போடாதது. நோய் வாய்ப்பட்ட காளைகளுடன் இனச் சேர்க்கை செய்வது. மூன்று முறைசினை ஊசி போட்டும் மாடு சினை பிடிக்காமல் இருப்பதன் மூலமும், மாடு சினை பிடிக்காமையைத்தெரிந்துகொள்ளலாம்.

 

 

 

 

 

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories