காளைகளுக்கு உடற்பயிற்சி

 

மா டுகளுடனான இன சேர்க்கைக்காக பயன்படுத்தப்படும் காளைகளை நன்றாக உடல் உறுதியுடன் பராமரிப்பது முக்கியமான அம்சமாகும்.

மேலும் அதிக உடல் எடை கொண்ட காளை குறைந்த விந்தை உற்பத்தி செய்யும் அல்லது மாடுகளுடன் இணைவு சேராமல் பாதிப்புக்குள்ளாகி விடும்.

ஆகையால் காளைகளின் உடல் எடையை சரியான அளவில் பராமரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
இன சேர்க்கைக்காக பயன்படுத்தப்படும் காளைகளுக்கு போதுமான அளவு உடற்பயிற்சி அளிக்கப்படவேண்டும்.

இவ்வாறு உடற்பயிற்சி அளிக்கப்பட்ட காளைகள் அதிகப்படியான விந்து உற்பத்தி செய்து மாடுகளுடன் எளிதான முறையில்இணை சேரும்.

இனவிருத்திக்காக பயன்படுத்தப்படும் காளைகளுக்கு என தனியாக கொட்டகை போதுமான இடவசதியுடன் அமைக்கவேண்டும்.

காளைகள் இருக்கும் கொட்டகைகள் எப்போதும் குளிர்ச்சியாக இருப்பதுடன் தண்ணீர் எப்போதும் இருக்குமாறு பார்த்துக் கொள்வது அவசியமாகும்.

மேலும் காளைகளுக்கு எப்போதுமே போதுமான அளவு எரிசக்தி விட்டமின்கள் தாது உப்புக்கள் புரதம் நிறைந்த தீவனத்தை அளிக்கவேண்டும்.

காளைகள் இனவிருத்தி காலத்திற்கு முன்பும் இன விருத்தி செய்யப்படும் போதும் போதுமான அளவில் பசுந் தீவனம் அளிக்க வேண்டும்.

பொதுவாக காளைகளுக்கு அடிக்கடி போதுமான அளவு தீவனம் அளித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

காளை மாடுகளுக்கு ஒரே சமயத்தில் அதிகப்படியான தீவனம் அல்லது குறைவான அளவு தீவனம் அளிக்கக்கூடாது.

மேலும் காளைகளை ஒரு நாளைக்கு இரண்டு முறை மாடுகளுடன் இனவிருத்தி செய்ய அனுமதிக்கலாம்.

முக்கியமான ஒன்று காளைகளுக்கு போதுமான அளவு உடற்பயிற்சி அளித்தால் மட்டுமே அவை சுறுசுறுப்பாகவும் அதிகப்படியாக உடல் எடை கூடாமல் இருக்கும்.

காளைகளின் உடல் நன்கு சுத்தம் செய்வது மிகவும் அவசியமாகும். எருமைகளில் தான் அதிகப்படியான முடி இருக்கும் ஆகையால் அதை சுத்தப்படுத்தி விட வேண்டும்.

மேலும் காளைகளுக்கு உடலில் ஏதேனும் மாற்றம் தெரிந்தால் உடனே மருத்துவரின் ஆலோசனைப்படி சிகிச்சை பெற்று முறையாக பராமரிக்க வேண்டும்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories