தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஊருக்கும் ஒரு வித நாட்டு மாடுகள் சிறப்பு வாய்ந்தவை. அந்த ஊர்களின் பெயர்களை கொண்டே எந்த மாடுகளும் அழைக்கப்படுகின்றன. உதாரணமாக காங்கேயம், உப்பளம் சேரி உள்ளிட்டவை ஆகும்.
அதைப்போல் தான் ஆந்திர மாநிலத்தில் சிறப்பு வாய்ந்த நாட்டு மாடுகள் என ஓங்கோல் ,புங்கனூர் மாடுகளை கூறலாம் .அந்த வகையில் உலக நாடுகளில் ஒன்றான புங்கனூர் பசு குறித்து இங்கு காணலாம்.
புங்கனூர் பசு
தமிழ்\ ஆந்திர மாநிலங்களின் எல்லையோரத்தில் இருக்கும் சித்தூர் மாவட்டம் புங்கனூர் மாடுகளுக்கு புகழ்பெற்ற பகுதி எனக் கூறப்படுகிறது.
இந்த மாடுகள் வெள்ளை ,பழுப்பு ,கறுப்பு ,சாம்பல் என்ற நான்கு நிறத்தில் கலந்து காணப்படும்.
இந்த மா ட்டினுடைய பாலில் புரோட்டீன் சத்து கூடுதலாக இருக்கிறது.
இந்த புங்கனூர் பசுவின் பாலில் அதிக கொழுப்புச்சத்து உள்ளது .அதாவது எருமைப் பாலை போல் 8% சதவீதம் கொழுப்புச்சத்து புங்கனூர் பசுவின் பாலில் உள்ளது.
மேலும் இந்தப் பசுவின் பாலில் அதிக மருத்துவ குணங்களும் அடங்கியுள்ளன என கூறப்படுகிறது.
சாதாரணமாக நாட்டு மாடுகளுக்கு கொடுப்பதைப் போலவே பச்சைக்புல் , சோளத் தட்டு, வைக்கோல், தவிடு கலந்த தண்ணீர் ஆகியவை இதற்கு தீவனமாக வழங்கப்படுகின்றன. ஒரு நாளைக்கு 5 கிலோ தீவனம் எடுக்கும் தன்மை கொண்டது. இந்த வகை மாடுகள் சாதுவாக பழக்கம் கொண்டுள்ளதால் இவற்றை எளிதாக பராமரிக்கலாம்.
காங்கேயம் மாடுகளை போல் திமில் ,உடல்வாகு, சீற்றத்துடனும் , ஆனால் அளவில் சிறியதாக இருக்கும், பால் உற்பத்தியிலும் வாழ்நாள் அளவிலும் இவை சாதாரண மா டுகளை விட குறைவாக இருக்காது.
இவை அதிகபட்சமாக 27 இல் இருந்து 30 இன்ச் வரை வளரும். அதாவது இதன் சராசரி உயரம் 70 முதல் 90 சென்டிமீட்டர் இருக்கும்.
இதன் உடல் எடை 115 முதல் 200 கிலோ அளவில் இருக்கும். ஆனால் ஒரு வேளைக்கு 1.15 லிட்டர் அளவுக்கு பால் தரக்கூடியது.