5 வரிசை மிளகாய் நடவிற்கு இடையில் 2 வரிசையை மக்கச்சோளம் ,சாமந்தி அல்லது சோளம் என ஏதேனும் ஒன்றை நடவு செய்வதன் மூலம் பூச்சித் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம் .இதன் மூலம் நோய் பரவக்கூடிய அஸ்வினியை கட்டுப்படுத்தலாம்.
தென்னையில் அதிக மகசூல் பெற ஏதேனும் வழி உள்ளதா?
தென்னையில் மஞ்சள் நிற பூக்களை கொண்ட பயிர்களை ஊடுபயிராக பயிரிடுவதன் மூலம் தேனீக்களை வண்ண மலர்கள் கவர்ந்து இழுக்கும்.
தேனீக்கள் இருப்பதால் தெ ன்னையில் மகரந்தச் சேர்க்கை அதிகளவில் நடைபெற்று . அதிக காய்கள் உருவாகும்.
பசுந்தாள் உரங்களை பயிரிட்டு அதனை பூக்கும் சமயத்தில் மடக்கி உழுவதன் மூலம் அதிக தழை ,மணி மற்றும் சாம்பல் சத்து கிடைக்கச் செய்து அதிக மகசூலைப் பெறலாம்.
ஹைபிரிட் விதையை எவ்வாறு உற்பத்தி செய்வது?
உங்கள் தோட்டத்தில் உள்ள பயிர்களை தினமும் கவனித்து வர வேண்டும்.
எந்த செடியில் பூச்சி தாக்குதல் இன்ரி அதிக மகசூல் மற்றும் நோய் தாக்குதல் இன்றி வளர்கிறதோ அந்த தாவரங்களை தேர்ந்தெடுத்து அவற்றின் மகரந்தத்தூள் களை நீக்கிவிட்டு வேறு ஒரு தாவரத்தின் மகரந்தத்தூள் பூவில் தூவி விடலாம்.
இந்த பூக்களை பட்டர் பேப்பர் கொண்டு கட்டிவிட வேண்டும். இதிலிருந்து கிடைக்கும் விதை ஹைபிரிட் விதை ஆகும்.
சம்பங்கியில் வேர் கிழங்குகளை எப்படி கட்டுப்படுத்தலாம்?
நடவு செய்த 30 நாளில் டிரைக்கோடெர்மா விரிடி என்ற எதிர் உயிர் பூ சாணத்தை எக்டருக்கு 5 கிலோ வீதம் 100 கிலோ மக்கிய தொழு உரத்துடன் கலந்து இடவேண்டும்.
நோய் தாக்கிய செடியை வேரோடு பிடுங்கி எடுத்து விட்டு அந்த இடத்தில் 3 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து ஊற்ற வேண்டும். மேலும் தூர் அழுகல் நோயைக் கட்டுப்படுத்த 200 லிட்டர் தண்ணீரில் ஆறு கிலோ வேப்ப எண்ணெயுடன் ஒரு லிட்டர் சோப்புத் திரவம் கலந்து தெளிக்கலாம்.
சீம்பால் என்பது என்ன? சீம்பாலில் உள்ள சத்துக்கள் மற்றும் அதன் தன்மை என்ன?
கறவை மாடுகள் கன்று ஈன்றவுடன் கொடுக்கும் பால் சீம்பால் எனப்படுகிறது. சாதாரண பாலில் இருந்து பெருமளவில் வேறுபட்டு காணப்படுகிறது.
சீம்பாலில் ஆல்புமின், ப்ளூ பிலிம் ஆகிய புரதச்சத்து சாம்பல் சத்து மற்றும் குளோரைடு போன்றவை அதிகம் உள்ளது ,மேலும் லாக்டோஸ் எனும் சர்க்கரை சத்து குறைந்த அளவில் உள்ளது.
சீன் பாலுக்கும் பாலுக்கும் வேறுபாடு குளோபுலின் புரதம் ஆகும். இது சீம்பாலில் அதிகமாக இருப்பதால்தான் அதனை காய்ச்சும்போது கட்டியாக மாறுகிறது.
பொதுவாக பாலைவிட சீம்பாலில் இரும்புச்சத்து 17 மடங்கு அதிகமாக உள்ளது.