பொன்னி ரக நெல் வகைகள் என்னென்ன?

வெள்ளைப் பொன்னி ,ஆந்திரா பொன்னி, டீலக்ஸ் பொன்னி ,அம்மன் பொண்ணி , மஞ்சள்பொன்னி, கர்நாடகா பொன்னி போன்ற புதிய ரக நெல் வகைகள் உள்ளன.

கொம்பு சாண உரம் உரத்தை எப்படி சேமிக்கலாம்?

கொம்பு சாண உரத்தை ஒரு மண் பானையில் வைத்து குளிர்ந்த காற்றோட்டம் நிறைந்த அறையில் வைக்க வேண்டும்..

மண் பானையை சுற்றிலும் தென்னை நார்க் கழிவுகளைக் கொண்டு பாதுகாக்க வேண்டும் .இவ்வாறு பாதுகாக்கப்படும் கொம்பு சாண உரத்தை ஒரு ஆண்டு வரை சேமித்து வைத்து பயன்படுத்தலாம்.

கத்தரிச் செடியின் வேர் புழுவை கட்டுப்படுத்துவது எப்படி?

செடி வைக்கும் போதே வேப்பம் புண்ணாக்கு, சூடோமோனாஸ், டிரைக்கோடெர்மா விரிடி கலந்து வைக்கவும்.

வாரம் ஒரு முறை பூச்சி விரட்டி தெளிக்கவும். 15 நாட்களுக்கு ஒரு முறை ஜீவாமிர்தம் தெளிக்கலாம் அல்லது நீரில் கலந்து விடவும்.

உருளைக்கிழங்கில் வெட்டு புழுக்கள் மற்றும் வெள்ளை வண்டுகலீ னால் வரும் சேதம் என்ன?

வீட்டுப் பொருட்கள் மற்றும் வெள்ளை வண்டுகள் உருளைக்கிழங்கு பயிரில் 10 சதம் வரை சேதத்தை ஏற்படுத்துகின்றன. இவை எல்லா பருவத்திலும் தோன்றும்.

இவை கிழங்குகளில் துளையிட்டு மாவுபகுதி உண்கின்றன. இதனால் தாக்கப்பட்ட கிழங்கில் பெரிய குழிகள் உண்டாகி நாளடைவில் கிழங்குகள் அழுகி விடுகின்றன.

மாட்டிற்கு வரும் சுண்டு வாதத்திற்கு என்ன மருந்து கொடுக்கலாம்?

வேப்ப எண்ணை ஒரு லிட்டர் ,இலுப்பை எண்ணெய் 100 மில்லி, வெள்ளை மிளகு 100 கிராம், திப்பிலி 50 கிராம் ,வால் மிளகு 100 கிராம், உப்பு ,பெருங்காயம் 10 கிராம் ஆகியவற்றை எடுத்து அதில் திடப் பொருட்களை மட்டும் சேர்த்துப் பொடியாக்க வேண்டும். பிறகு எண்ணெயுடன் சேர்த்து காய்ச்ச வேண்டும். காய்ச்சிய எண்ணெய் 500 மில்லி அளவிற்கு உள் மருந்தாக கொடுக்க வேண்டும்.

இந்த மருந்தை காலை, மதியம் ,மாலை என ஒரு நாளைக்கு மூன்று வேளை வீதம் 5 நாள் வரை தொடர்ந்து கொடுக்க வேண்டும். மாட்டை குளிப்பாட்டக் கூடாது.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories