மாடுகளுக்கு உதவி புரியும் பஞ்ச காவியம்!

இயற்கை கரைசலான பஞ்சகவ்யா விவசாயத்திற்கு மட்டுமல்ல மாடுகளுக்கும் உதவி செய்பவைகளாக உள்ளன. இதைப்பற்றி முழுமையாக இங்கு காணலாம்.

பஞ்சகாவியம் நுண்ணுயிரி , பாக்டீரியா , புரதச் சத்து, மாவுச் சத்து, கொழுப்புச் சத்து ,அமினோ அமிலங்கள், விட்டமின் ,நொதி பொருள், நுண்ணூட்டச்சத்து போன்றவற்றை அதிகப்படுத்தும் தன்மையை கொண்டுள்ளது.

விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு பஞ்சகாவியா வில் இருக்கும் நுண்ணுயிரிகள் தடுப்பாற்றலை ஏற்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

முதிர்ச்சியைக் கட்டுப்படுத்தி நீண்ட நாட்களுக்கு இளமையாக இருக்க பஞ்சகாவியாவி லுள்ள காரணிகள் உதவுகின்றன. பசி ஆர்வம் மற்றும் ஜீரண தன்மையை அதிகப்படுத்தி உடலில் உள்ள நச்சுகளை அகற்றி உதவிபுரியும். முடி மற்றும் தோல் ஆரோக்கியமாக இருக்க வழி செய்யும்.

மாடுகளுக்கு நாள் ஒன்றுக்கு ஒரு மாட்டிற்கு 100 மில்லி பஞ்சகாவ்யாவை தீவனத்தில் மற்றும் குடி நீரிலும் கலந்து கொடுத்தால் மாடுகள் ஆரோக்கியமாகவும் பால் உற்பத்தி அதிகரித்தும் காணப்படும்.

பால் மடி வீக்கம், பாதம் மற்றும் வாய் நோய்களை குணப்படுத்தி விடும். மாடுகள் தோல்களில் அதிக முடிகளுடன் , பளபளப்பாகவும் காணப்படும், அழகாகவும் காணப்படும்.

உலர்ந்த புற்கள் மேல் யூரியாவை தெளிப்பதற்கு பதிலாக 3% பஞ்சகாவ்யா கரைசலை தெளித்தால் மாடுகள் விரும்பி உண்ணும்.

 

 

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
Share on google
Google+
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories