மாடுகளை பொருத்தமட்டில் பருவ காலங்களுக்கு ஏற்ப பலவித நோய்கள் தாக்குகின்றன. சில நோய்களின் பெயர்கள் கூட நமக்குத் தெரியாது. அப்படிப்பட்ட நோய்களைப் பற்றி இங்கு காணலாம் இங்கு காணலாம்.
மாடுகளை தாக்கும் நோய்களில் இன்று நாம் பார்ப்பது 2 நோய்கள்.
புல்வலிப்பு நோய்
சிவப்பு மூக்கு நோய்
முதலாவதாக புல் வலிப்பு நோய்….
புல் வலிப்பு என்ற பெயர் புதிதாக இருந்தாலும் இது மாடுகளை தாக்கும் போது இயல்பாக தான் இருக்கும்.
இந்த நோய்க்கு கோதுமை பற்கள் என்ற பெயரும் உண்டு.
மெக்னீசிய சத்து குறைபாட்டால் ஏற்படுவதே புல் வலிப்பு நோய். இது ஒரு உயிர்க்கொல்லி நோய் எனவும் கூறலாம்.
சதைப்பற்றுள்ள அதாவது வளர்ச்சி அடையாத பு ற்களை மேய்வதால் மாடுகளுக்கு இந்த நோய் ஏற்படுகிறது.
இது எல்லா வயதுடைய மாடுகளையும் தாக்கும் தன்மை கொண்டது.
இளங்கன்றுகளுக்கு பால் ஊட்டச்சத்தை குறைக்கிறது.
இந்த நோயை கவனிக்காமல் விட்டால் இறப்பு , கோமா,போன்ற நிலைக்கு மாடுகள் கொண்டு செல்லப்படுகிறது.
இதற்கான தீர்வுகள்….
எதிர்ப்பு சக்தி வாய்ந்த மாடுகளை மெக்னீஸிய குறைபாடுகள் உள்ள புல் வளர்ந்த இடங்களில் மேய விடலாம்.
நான்கு மாதத்திற்கு குறைவான வயதுடைய கன்றுகள் நோய் தாக்கும் சக்தி அ ற்றவை. அவற்றை இது போன்ற புல்களை மேய விடக்கூடாது.
மேய்ச்சல் நிலங்களில் டோலமைட் அதிகம் மெசினிசியம் சுண்ணாம்பு சத்து நிறைந்த உரங்களை இடவேண்டும்.
கால்நடை தீவனத்தில் எல்லா சத்துக்களும் சரிவிகிதமாக இருக்குமாறு தரவேண்டும்.