மாடுகளுக்கு சுளுக்கு நீங்க இதைக்கொண்டு பற்று போடலாம்!

மாதுளை நடவு செய்வது எப்படி?

பொதுவாக பதியன் குச்சிகள் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட மாதுளை குச்சிகளையும் நடவுக்கு பயன்படுத்தலாம் மாதுளையை எல்லாவகை மண்ணிலும் நடவு செய்யலாம்.

ஆழம் ,அகலம், நீளம் முதல் 60 சென்டிமீட்டர் கொண்ட குழிகளை 2.5-3 மீட்டர் இடைவெளியில் எடுத்து அதில் தொழு உரம் மேல் மண் கலந்து நிரப்பி ஒரு வாரத்துக்குப் பிறகு குச்சிகள் மூலம் உற்பத்தி செய்த கன்றுகளை நடலாம்.

கரும்பில் அமெரிக்கன் படைப்புழுவின் தாக்கத்தின் அறிகுறி எப்படி இருக்கும்?

கரும்பில் அமெரிக்கன் படைப்புழு 15 முதல் 90 நாட்கள் வயதுடைய இளம் பயிர்களைத் தாக்கும் இவை இலையின் குருத்து பகுதிக்குள் நுழைந்து இலைகளைத் தின்று சேதத்தை ஏற்படுத்தும்.

இதனால் கரும்பு இ லைகளில் நீள்வட்ட வடிவ ஓட்டைகளும் அதிகம் பாதிக்கப்பட்ட இலைகள் மடங்கி காணப்படும் புழுக்களின் தாக்குதலால் அதிக அளவு மகசூல் பாதிப்பு ஏற்படும்.

கொத்தமல்லி சாகுபடியில் எப்படி நீர் மேலாண்மை செய்ய வேண்டும்?

கொத்தமல்லி விதை விதைத்தும் ஒரு முறையும் பிறகு மூன்றாவது நாள் ஒரு முறையும் பிறகு 7 முதல் 10 நாட்களுக்கு ஒரு முறையும் நீர் பாய்ச்ச வேண்டும்.

கொத்தமல்லி விதைத்து எட்டாவது நாளில் இருந்து 15-வது நாளில் விதை முளைக்க தொடங்கும். பிறகு எக்டருக்கு 10 டன் தொழு உரமிட வேண்டும்.

தேனீர் பெட்டி வைப்பதால் விவசாயிகளுக்கு என்ன பயன்?

இயற்கையில் தேனீக்கள் மற்ற பூச்சிகளை விட வேளாண்மைக்கு மிகவும் உதவியாக இருக்கின்றன.

தேனீக்கள் பூவுக்குள் சென்று தேன் சேகரிக்கும் போது பூக்களின் மகரந்தங்கள் பரப்பிய அயல் மகரந்த சேர்க்கை ஏற்பட வழி வகுக்கின்றன. தேனீக்கள் இருக்கும் இடங்களில் அதிக அளவு மகசூல் கிடைக்கும்.

மாடுகளுக்கு சுளுக்குமற்றும் அதனால் ஏற்படும் வீக்கத்தை என்ன செய்ய வேண்டும்?

மாடுகளுக்கு கழுத்து, இடுப்பு, முதுகு ,கால்களில் ஏற்படும் சுளுக்கு தவிடை வறுத்து சூட்டுடன் ஒத்தடம் கொடுக்க வேண்டும்.

வீக்கத்துடன் கூடிய சுளுக்கு இருந்தால் மருதாணி இலையை 100 கிராம் அளவு எடுத்து நன்றாக அரைத்து பூச வேண்டும்.

நாவல் மரப்பட்டையை சுமார் 100 கிராம் அளவு எடுத்து அரைத்து பற்று போடலாம்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories