லாபகரமான கறவை மாட்டுப் பண்ணை நடத்துவது என்பது வருடம் ஒரு கன்று ஒரு பசுமாட்டில் இருந்து பெறுவது என கூறலாம்.
பொதுமக்கள் கலப்பின மாடுகளை நன்கு பராமரித்து வந்தால் 18 மாத வயதுக்குள் சினைப்பருவ அறிகுறிகளை வெளிப்படுத்தும்.
வருடம் ஒரு கன்று ஈனுதல் கன்று ஈன்ற 60 முதல் 90 நாட்களுக்குள் மறுபடி தாய் பசுவை கரு தரிக்க செய்ய வேண்டும்.
இதனை வெற்றிகரமாக சரியான தருணத்தில் கருவூட்டல் செய்தல் சினை பரிசோதனை செய்தல் சினை மாடுகளை பராமரித்தல் மற்றும் கன்று ஈன்ற மாடுகளை பராமரித்தல் போன்ற வழிமுறைகளை சரியாக பின்பற்ற வேண்டும்.
சினைப்பருவ அறிகுறிகள்:
கரவை மாடுகள் சராசரி 21 நாட்களுக்கு ஒரு முறை பருவத்திற்கு வருகின்றன பருவத்தில் இருக்கும்போது கறவை மாடுகளில் சில அறிகுறிகளை வெளிப்படுத்தும்.
பசு மாடுகளில் இந்த அறிகுறிகளை எளிதாக காண இயலும் ஆனால் எருமை மாடுகளில் மிகவும் கவனமாகப் பார்த்தால் மட்டுமே அறிகுறிகள் தென்படும்.
மாடு அமைதியின்றி காணப்படும்.
அடிக்கடி அடிவயிற்றிலிருந்து கத்திக்கொண்டே இருக்கும்.
அருகிலுள்ள மாடுகளின் மேல் மற்றும் மற்ற மா டுகளையும் காளைகளையும் தன்மீது தாவ அனுமதிக்கும்.
தீவனத்தில் அதிகம் நாட்டம் இல்லாமல் குறைந்த அளவே தீவனத்தை எடுத்துக் கொள்ளும்.
அடிக்கடி சிறிது சிறிதாக சிறுநீர் கழிக்கும் இது எருமை மாடுகளில் அதிகமாக காணப்படும்.
பசுக்களின் பிறப்பு உறுப்பில் கண்ணாடிப் போன்ற திரவம் காணப்படும்.
கர வையில் உள்ள மாடாக இருந்தால் பாலின் அளவு இரண்டு மூன்று நாட்களுக்கு குறைவாக இருக்கும்.
சினைப்பருவத்தில் கவனிக்க வேண்டிய சில குறிப்புகள்:
ஒரு சில மா டுகளில் சினை ஆன பின்பும் கண்ணாடிப் போன்ற திரவம் காணப்படும் இதற்கு இடைப்பட்ட பின்பும் அறிகுறிகள் வெளிப்படுத்தல் என்று பெயர்.
எனவே இந்த அறிகுறி மாடுகள் சினை பருவத்திற்கு வந்து விட்டுவிட்டது இணைத்து கருவூட்டல் செய்தால் கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
சினை பருவ காலத்தில் வழியும் கண்ணாடி போன்ற தரத்தில் வெள்ளை கலந்தோ அல்லது காணப்பட்டால் கருப்பை நோய் உண்டாவதற்கு அறிகுறியாகும்.
எனவே இதை அலட்சியமாக நினைக்காமல் அந்த நோய்க்கான மருத்துவரை பார்ப்பது நல்லது.
மாடுகள் சாதாரணமாக சராசரியாக 21 நாட்களுக்கு ஒரு முறையே சினை தருணத்திற்கு வரும் இந்த 21 நாட்களுக்குள் பலமுறை தருணத்தை அடைந்தாலோ அல்லது திரவம் வடிதல் தொடர்ந்து காணப்பட்டாலும் கருப்பைக் கோளாறுகள் இருக்கலாம் இதை முறையாக சிகிச்சை அளிப்பது மிகச்சிறந்ததாகும்.