மாட்டுப்பண்ணையை லாபகரமாக நடத்தும் வழிமுறைகள் !

மாடுகளை வளர்க்க ஆர்வம் காட்டும் கால்நடை விவசாயிகள், மாட்டுப்பண்ணையைப் பராமரிப்பதிலும் சற்றுக் கூடுதல் கவனம் செலுத்தினாலே மாட்டுப்பண்ணையை லாபகரமானதாக மாற்றிக்கொள்ள முடியும்.

கால்நடை வளர்ப்பு (Livestock)
மற்றத் தொழில்களைக் காட்டிலும், இயற்கையோடு இணைந்தக் கால்நடை வளர்ப்பு என்பது கொஞ்சம் சவால் மிகுந்ததுதான். எனினும், கால்நடைகளுக்குக் கொஞ்சம் அன்பும், பாசமும் காட்டினால் போதும். அவை நம் அன்பை அரவணைத்துக்கொள்ளும் . அவற்றைப் பழக்கிக்கொண்டால் போதும், நமக்காக அத்தனையையும் விட்டுக்கொடுக்கும் தன்மை படைத்தவை கால்நடைகள் எனவே

பால் உற்பத்தி (Milk production)
அந்த வகையில், லாபகரமானதாக மாட்டுப்பண்ணையை மாற்றிக்கொள்ள வேண்டுமெனில் மாடுகள் பால் உற்பத்தித் திறனுடன் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும். நோய் எதிர்ப்புத் திறன் அதிகமுள்ள மாடு, கன்றுகள் தொற்றால் பாதிக்கப்படுவதில்லை. ஆனால் சிலர் கறவையிலுள்ள மாடுகளில் பால் குறையும் என்பதற்காகத் தடுப்பூசிப் போடுவதை நிறுத்தி விடுவர்.

ஒரே நேரத்தில் தடுப்பூசி (Simultaneous vaccination)
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கால்நடை டாக்டர் ஆலோசனை மூலம் பண்ணை மாடுகளுக்கும் ஒரே நேரத்தில் தடுப்பூசி போட வேண்டும்.
நச்சுத்தன்மையற்ற தீவனம், காற்றோட்டத்துடன் கூடிய சுகாதாரமான கொட்டகை ஆகியவை கால்நடைகளுக்கு தேவை.

சுத்தம் (Cleaning)
தீவனம் மற்றும் தண்ணீர்த் தொட்டியைத் தினமும் சுத்தம் செய்ய வேண்டும்.
மாதம் ஒரு முறை தண்ணீர் தொட்டிக்கு சுண்ணாம்பு பூசவேண்டும்.

சாணம் பராமரிப்பு (Dung maintenance)
300 அடி தள்ளிக் குழித் தோண்டி, சாணத்தைக் கொட்ட வேண்டும். பண்ணைக்கு முன்பாக கிருமி நாசினி மருந்து கலந்த தண்ணீரில் காலை கழுவிய பின் உள்ளே நுழைந்தால் நோய்க்கிருமிகள் பண்ணைக்குள் நுழைவதைத் தடுக்கலாம் மற்றும்

பால் கறக்கும் இயந்திரம் (Milking machine)
பால் கறக்கும் இயந்திரத்தைப் பயன்படுத்துவதாக இருந்தால், கறவை முடிந்தவுடன் பால் இயந்திரத்தின் ரப்பர் பாகத்தை சுத்தம் செய்ய வேண்டும்.
பால் காம்பை கறக்கும் முன்பும் கறந்த பின்பும் 0.5 சதவிகிதம் பொட்டாசியம் பர்மாங்கனேட் கலந்த தண்ணீரால் கழுவ வேண்டும் என்றார்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories