மாட்டின் மீது பேன்கள் காணப்பட்டால் வேப்ப எண்ணெய் மாட்டின் மீது தடவி சிறிது நேரம் கழித்து குளிப்பாட்டினால் அவைகளை கட்டுப்படுத்தலாம்.
தர்பூசணியை வைரஸ் காணப்படுகிறது அதற்கு என்ன செய்வது.
இதற்கு Grubgill Bio mite தெளிக்க வேண்டும்.
முருங்கையில் அதிகமாக பூக்கள் உதிர்வதையும் கருகுவதையும் பிஞ்சுகளை உதிர்வதையும் எவ்வாறு தடுப்பது.
மீன் அமிலக் கரைசல் 200 மில்லி எடுத்து 10 லிட்டர் தண்ணீரில் கலந்து பயிரின் மேல் தெளிக்கலாம் மற்றும் ஜீவாமிர்தக் கரைசல் முறையை மாறி மாறி வாரம் ஒரு முறை தெளித்து வந்தால் பூக்கள் உதிர்வதைத் தடுக்கலாம். அரப்பு மோர் கரைசலை பூ பிடிக்கும் பருவத்தில் தெளிப்பதால் மரத்தின் வளர்ச்சி வேகமாகவும் நிறைய பூக்கள் வைக்கும். காய்கள் உண்டாகும்.
பன்னீர் ரோஜாவின் ஊடுபயிராக என்ன பயிர் செய்யலாம்.
வெங்காயம், வெண்டைக்காய், புளிச்சக்கீரை, முள்ளங்கி போன்ற காய்கறிகளை நடவு செய்யலாம்.