எருமை வளர்ப்பு பாகம் – 1

 
1. அறிமுகம்
2. எருமை மாட்டு இனங்கள்
3. இந்தியாவின் எருமை மாட்டு இனங்கள்
 
அறிமுகம் :
 
எருமை மாடானது நல்ல அதிக கொழுப்புச் சத்துள்ள பால் மட்டுமன்றி இறைச்சி மற்றும் வேளாண் வேலைகளுக்கும் பயன்படுகிறது. எல்லா வளர்ப்பு மிருகங்களிலும் எருமை மாடுகளே அதிக உற்பத்தி தரக்கூடியவை. அதிலும் ஆசிய எருமைகள் அதிகத் திறனுடன் உழைக்கக்கூடியவை. ஆசிய எருமைகள் ஆண்டொன்றுக்கு 45 மில்லியன் டன்கள் உற்பத்தி தருகின்றன. அதில் 30 மி. டன்கள் இந்தியாவிலிருந்து மட்டும் பெறப்படுகிறது. ஆள் திறன் மற்றும் செலவு குறைவு. எனவே தான் எருமை மாடு வளர்ப்பு சிறந்ததாகக் கருதப்படுகிறது. ஒரு எருமை மாடு இறைச்சிக்கென வளர்க்கப்படும் போது கிடைக்கும் (350 – 450 கி.கி எடை) இறைச்சியானது அதிக இலாபம் தரக்கூடியது.
 
எருமை மாட்டு இனங்கள் :
 
முர்ரா :
 
தோற்றம் : இது அதிகமாக பஞ்சாப், டெல்லியில் காணப்படுகிறது.
 
சிறப்பியல்புகள் :
 
* இந்த இனம் பரவலாக ரோடக், ஹீசார் போன்ற ஹரியானாவின் மேற்குப் பகுதிகளில் காணப்படுகிறது.
 
* பாலில் 7 சதவிகிதம் கொழுப்புச் சத்து உள்ளது.
 
* இதன் உடல் நன்கு பெருத்து, கொம்பு வளைந்து தலை கழுத்துப் பகுதிகள் நீண்டும் மடி பெரியதாகவும் காணப்படும்.
 
* முதல் கன்று ஈனும் வயது 45-50 மாதங்கள் நல்ல பராமரிப்பில் இது 36-40 மாதத்திலேயே கன்று ஈனும் திறனுடையது.
 
* அடுத்தடுத்த கன்று இடைவெளி 450-500 நாட்கள்
இது சிறிது குளிர் மிகுந்த கடலோரப் பகுதிகளில் நன்கு வளரும். எனினும் இதன் அதிக உற்பத்திக்காக நாடு முழுவதும் விரும்பி வளர்க்கப்படுகிறது.
 
சுர்தி :
 
தோற்றம் : குஜராத்
 
சிறப்புப் பண்புகள் :
 
* கைரா, பரோடா மாவட்டங்களில் (குஜராத்தைச் சேர்ந்தவை) அதிகம் காணப்படுகிறது.
 
* இதன் உடல் நல்ல அமைப்புடன் சராசரி எடையுள்ளது.
 
* கழுத்து நீண்டும், கண்கள் நன்கு கவரும் வண்ணம் இருக்கும்.
 
* கொம்புகள் அரிவாள் போன்று சிறிது நீளமாகவும், தட்டையாகவும் இருக்கும்.
 
* இவ்வினங்கள் கறுப்பு (அ) காவி கலந்து இருக்கும். இதன் கால் தொடையில் இரண்டு வெள்ளை நிறப்பகுதி காணப்படுவது இதன் சிறப்பம்சம் ஆகும்.
 
* சராசரி பால் அளவு 1700 கி.கி
 
* முதல் கன்று ஈனும் வயது 40-50 மாதங்கள். அடுத்தடுத்துள்ள கன்றுகள் 400-500 நாட்கள் இடைவெளியில் கன்று ஈனும். இதன் காளைகள் எளிய வேலைகளுக்கு ஏற்றது.
 
ஜாப்ரா பாதி :
 
தோற்றம் :
 
* குஜராத்தின் கத்தைவார் மாவட்டம்
 
* இதன் சராசரி பால் அளவு 1800-2700 கிகி
 
* இதன் பாலில் கொழுப்புச் சத்து மிக அதிகமாக இருக்கும்.
 
இந்தியாவின் எருமை மாட்டு இனங்கள் :
 
1. இனம் : ஜாப்ராபாதி
 
தோற்றம் : குஜராத்
 
காணப்படும் மாவட்டங்கள் : கத்தைவார், ஹான்ரேலி, ஜாப்ராபாதி
 
பரவியுள்ள இடங்கள் : செளராய் ராவின் இனப்பெருக்க இடங்கள்
 
பயன்பாடு : கறவை
 
2. இனம் : முர்ரா
 
தோற்றம் : ஹரியானா, பஞ்சாப்
 
காணப்படும் மாவட்டங்கள் : ரோடக், ஹிஸ்ஸாக், கர்னல், ஜின்ட், கர்கியான், உத்திரப் பிரதேசத்தின் மேற்குப் பகுதிகள், நாபா மற்றும் பாட்டியாலா
 
பரவியுள்ள இடங்கள் : ரோடக், டெல்ஹி, ஜகன்ளார், மகிம், ஹிசார், பிவானி, ஹன்சி, நங்கோலி.
 
பயன்பாடு : கறவை
 
3. இனம் : சுர்தி
 
தோற்றம் : குஜராத்
 
காணப்படும் மாவட்டங்கள் : கேடா, வடோடரா
 
பரவியுள்ள இடங்கள் : குஜராத் முழுதிலும்
 
பயன்பாடு : கறவை
 
எருமை மாடுத் தெரிவுகள் :
 
* இந்தியாவில் முர்ரா, மஹ்சானா போன்ற பண்ணைக்கு ஏற்ற அதிக பால் தரும் இனங்கள் காணப்படுகின்றன.
 
* வெண்ணெய், நெய் போன்றவை தயாரிக்க எருமை மாட்டின் பால் அதிகம் பயன்படுகிறது. ஏனெனில் பசுவின் பாலை விட எருமைப் பாலில் கொழுப்பு சத்து அதிகம் உள்ளது.
 
* எருமை மாடுகள் நீண்ட நாட்கள் கழித்தே கன்றை ஈனும். 16-18 மாத இடைவெளியில் கன்றுகள் ஈனும் எருமைக் காளைகளுக்கு மதிப்பு குறைவே.
 
* இது அதிக நார்ச்சத்துள்ள பயிர் கழிவுகளை தீவனமாக எடுத்துக் கொள்வதால் பராமரிப்புச் செலவு குறைவே.
 
* எருமைகள் எப்போதும் குளிர்ந்து நிலையில் இருக்கவேண்டும். எனவே அடிக்கடி கழுவுதல், நீரில் உலவ விடுதல் அவசியம்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories