3000 கிலோ வரை பால் உற்பத்தி தரும் பசு மாட்டு இனங்கள்!

இந்தியாவில் கால்நடை வளர்ப்பு என்பது தற்போது அதிக லாபம் தரும் தொழிலாக மாறி வருகிறது. இவை லாட்சக்கணக்கான மக்களுக்கு நல்லதொரு வேலைவாய்ப்பு மற்றும் வருமானத்தையும் வழங்கி வருகிறது மற்றும்

இதிலும் குறிப்பாக பசுவின் பால் மிகவும் சத்தானதாக கருதப்படுகிறது, எனவே தான் பால் மற்றும் பாலில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்களுக்கான தேவை இந்திய சந்தையில் அதிகரித்து வருகிறது. இத்தகைய சூழ்நிலையில், பால் உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் மாட்டினங்களின் தேவையும் அதிகரித்துள்ளது.
அந்த வகையில், அதிக பால் உற்பத்தி தரக்கூடிய உள்நாட்டு பசு மாட்டினங்கள் குறித்து நாம் தெரிந்துகொள்வோம்

உள்நாட்டு இனங்கள்
கிர் பசு – Gir cow of Gujarat
கிர் பசு மாட்டினம் தேசன், குஜராத்தி, கத்தியவாரி, சோர்தி மற்றும் சூரத்தி போன்ற பெயர்களிலும் அறியப்படுகிறது.

குஜராத்தின் தெற்கு கத்தியவார் பகுதியிலுள்ள கிர் காடுகளில் இருந்து இம்மாட்டினம் உருவானது.

இதன் தோல் வெள்ளை நிறத்துடன், அடர்ந்த சிவப்பு நிற அல்லது சாக்லேட் பழுப்பு நிற திட்டுக்களுடன் காணப்படும். சில சமயங்களில் கருப்பு அல்லது முழுவதும் சிவப்பு நிறமாகவும் காணப்படும்.

கொம்புகள் வளைந்து, அரை வட்ட நிலா போன்று இருக்கும்.

இவ்வின மாட்டினங்களின் பால் உற்பத்தி 1200-1800 கிலோவாகும்.

முதல் முறை கன்று ஈனும் வயது சராசரியாக 45-54 மாதங்களாகவும், கன்றுகள் ஈனுவதற்கான இடைவெளி சராசரியாக 515-600 நாட்களாக இருக்கும் இதில்

சிவப்பு சிந்தி – Red Sindhi
இவ்வினம் சிவப்பு கராச்சி மற்றும் சிந்தி என்றும் அறியப்படுகிறது.

பஞ்சாப், ஹரியானா, கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா மற்றும் ஒடிசாவில் இம்மாட்டினங்கள் அதிகம் காணப்படுகின்றன.

இவை சிவப்பு நிறமாகக் காணப்படும். இவற்றின் உடல் அடர்ந்த சிவப்பு நிறம் முதல் வெளிறிய சிவப்பு நிறத்துடன் வெள்ளை நிறக் கோடுகளுடன் காணப்படும்.

இவ்வின மாடுகளின் பால் உற்பத்தி சராசரியாக 1,100-2,600 கிலோ வரை இருக்கும்.

சிந்தி மாட்டினங்கள் வெவ்வேறு இனங்களுடன் கலப்பினம் செய்வதற்கு பெரும்பாலும் உபயோகப்படுத்தப்படுகின்றன.

முதல் முறை கன்று ஈனும் வயது சராசரியாக 39-50 மாதங்களாகவும், கன்று ஈனும் இடைவெளி சராசரியாக 425-540 நாட்களாக இருக்கும்.

சாஹிவால் – Sahiwal Cow
சாஹிவால் மாட்டினம் உ.பி., ஹரியானா, மத்திய பிரதேசத்தில் அதிகம் வளர்க்கப்படுகிறது.

இந்த மாட்டினம் லோலா (தளர்ந்த தோல்), லம்பி பார், மான்டிகோமெரி, முல்தானி, டெலி என்றும் அறியப்படுகிறது.

இம்மாட்டினங்களின் சராசரி பால் உற்பத்தி 2,725-3,175 கிலோவாகவும், பால் கறவைக்காலம் 300 நாட்களாகவும் இருக்கும்.

இவற்றின் தோல் சிவப்பு கலந்த பழுப்பு நிறத்துடன் அல்லது வெளிறிய சிவப்பு நிறத்துடன் சில சமயங்களில் வெள்ளைத் திட்டுகளுடன் காணப்படும் என்றார்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
Share on google
Google+
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories