திருச்சி மாவட்டத்தில் இயற்கை முறையில் காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மானியம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் கீரை வகைகளுக்கு ரூபாய் 25oo கத்தரி ,வெண்டை, தக்காளி, வெங்காயம், பச்சைமிளகாய், கருவேப்பிலை ,உள்ளிட்ட காய்கறி பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூபாய் 3 ஆயிரத்து 750 முருங்கையில் மரவள்ளிக்கிழங்கு, கோவக்காய் ,பூசனி ,பயிர்களுக்கு ரூபாய் ஐந்தாயிரம் முள்ளங்கி, கொத்தவரை ,கொத்தமல்லி உள்ளிட்ட பயிர்களுக்கு ரூபாய் 2500 ஊக்க தொகை வழங்கப்படும். இதைத்தவிர இயற்கை விவசாய சான்றிதழ் பெறுவதற்கு ரூபாய் 500 வழங்கப்படுகிறது இதற்கு விவசாயிகள் தனியாகவும் விவசாய குழுக்கள் மூலமும் விண்ணப்பிக்கலாம் இதற்கு விண்ணப்பிக்க தங்கள் பகுதியில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் அல்லது நுண்ணீர் பாசன மேலாண்மை தகவல் அமைப்பு இணையதளத்திலும் பதிவு செய்து பயன்பெறலாம் என திருச்சி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இன்று முதல் திங்கட்கிழமை தோறும் பருத்தி ஏலம் நடக்க உள்ளது நன்கு முதிர்ந்து மலர்ந்த வெடித்த பருத்தியை அதிகாலை நேரத்தில் பி ரித்து உலரவைத்து ஏலத்துக்கு கொண்டு வரவேண்டும் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.