இயற்கை விவசாயத்திற்கு மானியம்-விண்ணப்பம் செய்யுங்கள்!

புதுக்கோட்டை மாவட்டத்தில் இயற்கை முறையில் காய்கறி சாகுபடிக்கு செய்வோர் அரசு மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தொடரும் நோய்கள் (Continuing diseases)
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது ஆன்றோர் வாக்கு. ரசாயனங்களைக் கொண்டு விளைவிக்கப்பட்ட பொருட்களை வாங்கி சமைத்து சாப்பிடுவதால்தான். பல்வேறு நோய்களும், நம்மைத் தொடர்கின்றன.

இதன் விளைவாக அடிக்கடி மருத்துவமனைக்கு செல்லும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம். எனவே நஞ்சில்லா உணவு என அழைக்கப்படும், அங்கக வேளாண்மை , அதாவது இயற்கை விவசாயம் மூலம் விளைவிக்கப்படும் காய்கறி உள்ளிட்ட உணவுப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வு மக்களிடையே பரவி வருகிறது.

இயற்கை விவசாயம் தொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் பி. உமா மகேஸ்வரி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

இயற்கை முறையில் ரசாயனங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் இன்றி விளைவிக்கப்படும் விளைபொருள்களுக்கு தமிழ்நாடு அரசின் தரச்சான்றிதழ் வழங்கப்படுகிறது.
இதன் மூலம் அங்கக விளைபொருள்களை வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யலாம்.

மானியம் (Subsidy)
இயற்கை முறையில் சாகுபடி செய்யும் கீரை வகைகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.2,500ம், வெண்டை, கத்தரி, தக்காளி போன்ற பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.3,750ம் வழங்கப்பட்டு வருகிறது.

சான்றுக்கு ரூ.500 (Rs.500 per certificate)
இயற்கை முறையில் காய்கறி பயிர்களைச் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு சான்று பெறுவதற்கு ரூ.500 மானியமாக வழங்கப்படுகிறது என்று கூறினர்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories