காய்கறி விவசாயிகள் மானியத்துடன் பந்தல் அமைக்க அழைப்பு

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியத்தில் பெரும்பாலான விவசாயிகள் காய்கறிப் பயிர்களை அதிக அளவில் பயிரிடுகின்றனர் இவர்களுக்கும் தோட்டக்கலைத் துறையின் மூலம் சொட்டு நீர் பாசனம் விதை வேர் மற்றும் அடி உரம் போன்றவை மானியத்துடன் வழங்கப்படுகிறது அந்த வகையில் தற்போது காய்கறி பயிரிடும் விவசாயிகள் நிரந்தர பந்தல் அமைக்க மானியம் வழங்கப்படுகிறது கொடி வகையான காய்கறி பயிரிடும் விவசாயிகள் நிரந்தர பந்தல் அமைக்க 2.50 ஏக்கருக்கு 4 லட்சம் ரூபாய் செலவாகும் இதில் தோட்டக்கலை துறையின் மூலம் 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது அது அதிகபட்சமாக இரண்டு லட்சம் ரூபாய் வரை மானியம் கிடைக்கும் எனவே காய்கறி பயிரிட்டுள்ள விவசாயிகள் இந்த மானியம் பெறுவதற்கு திட்டமும் அடங்கல் , சிட்டா, வரைபடம் வங்கி கணக்கு புத்தகம் நகல் மற்றும் இரண்டு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ உடன் தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என அதிகாரிகள் கூறியுள்ளார்கள் .

திண்டுக்கல் மாவட்டத்தில் தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தின் கீழ் ரூபாய் 65.85 லட்சம் மதிப்பில் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன உயர் ரக காய்கறி விதைகள் சின்ன வெங்காயம் குழித்தட்டு நாற்று தக்காளி ,கத்தரி, மிளகாய் நாற்றுகள் முழு மானியத்தில் வழங்கப்பட உள்ளது ஒட்டுச் செடிகள் திசு வாழை எலுமிச்சை நாற்றுகள் வழங்கப்படவுள்ளன 50 சதவீத மானியத்தில் பண்ணைக்குட்டைகள் வெங்காய சேமிப்பு கிடங்கு காய்கறி விற்பனை வண்டி ஆகியவையும் பின்னேற்பு மானியத்தில் வழங்கப்பட உள்ளது இயற்கை விவசாயம் செய்ய ஊக்கத்தொகை தேனீக்கள் உடன் கூடிய பெட்டிகள் மானியத்தில் வழங்கப்பட உள்ளதால் விருப்பமுள்ள விவசாயிகள் குஜிலியம்பாறை தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
Share on google
Google+
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories