திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டாரத்திலும் நடப்பு குறுவை பருவத்தில் 7,500 ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது சாகுபடியில் மகசூல் அதிகரிக்கும் பொருட்டு தமிழக அரசு குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தை அறிவித்துள்ளது இத்திட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் ஏக்கருக்கு டிஏபி 50 கிலோ யூரியா 90 கிலோ மற்றும் பொட்டாஷ் 25 கிலோ ஆகிய உரங்களை மானியத்தில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது இதில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் குறுவை சாகுபடி செய்வதற்காக திட்டங்கள் மற்றும் ஆதார் அட்டை நகலுடன் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் அல்லது வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் இத்திட்டத்தில் சான்று பெற்ற விதைகளை 50% மானிய விலையிலும் பசுந்தாள் உரம் விதைகள் கிலோவிற்கு ரூபாய் 70 மானியம் என ஏக்கருக்கு 20 கிலோ வரை குடவாசல் கண்டரமாணிக்கம் தென்கரை மற்றும் அய்யம்பேட்டை அறிவியல் வேளாண்மை விரிவாக்க மையங்களில் பெற்று பயன்பெறலாம் என வேளாண்மை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் கற்பகக்கொடி ஒன்றியத்தில் தோட்டக்கலை துறையின் சார்பில் 341 ஏக்கர் நிலத்தில் சொட்டு நீர் பாசனம் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது இந்த ஒன்றியத்திற்கு 2021ஆம் ஆண்டு மற்றும் 2022 ஆம் ஆண்டிற்கு சொட்டு நீர் பாசனத்திற்காக ரூபாய் 3.17 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது இத்திட்டத்தின் 5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு 100% மானியம் வழங்கப்படுகிறது 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருப்பவர்களுக்கு 75 சதவீதம் மானியம் கிடைக்கும் இந்த திட்டத்தில் பயன்பெற ஆர்டர் ரேஷன் கார்டு சிட்டா அடங்கல் மற்றும் சிறு குறு விவசாயிகளுக்கு ஆணும் சான்று விண்ணபிக்க வேண்டும் மேலும் இத்திட்டத்தின் ஒரு பகுதியாக துணியில் நீர் மேலாண்மை திட்டத்தின் கீழ் ஆழ்குழாய் கிணறு அமைக்க ரூபாய் 25 ஆயிரமும் கோயில் மற்றும் மின் மோட்டாருக்கு ரூபாய் 15 ஆயிரமும் இதைத்தவிர பிவிசி குழாய் அமைத்து ரூபாய் பத்தாயிரம் மானியமாக வழங்கப்படுகிறது மேலும் நீர் தொட்டி அமைக்க ரூபாய் 40,000 பின்னேற்பு மானியமாக வழங்கப்படுகிறது இந்த திட்டத்தில் அனைத்து விவசாயிகளும் சேர்ந்து பயன்பெறுமாறு வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்