கோவை மாவட்டம் கண்ணனூர் வட்டாரம் உட்பட்ட சிறு குறு விவசாயிகளுக்கு சொட்டு நீர் பாசனம் அமைக்க 100% மானியம் பெரிய விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியமும் வழங்கப்படுகிறது. ஆகவே இதில் பயன்பெற விரும்பும் ஒரு வட்டார விவசாயிகள் ஒன்றிய அலுவலகத்தில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் அடங்கல், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வங்கி கணக்கு புத்தகம் ,கூட்டு வரைபடம் ,நிலவரைபடம் ,வில்லங்கச்சான்று சிறு குறு விவசாயிகளுக்கு சான்றிதழ் ஆகியவற்றின் நகல்கள் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன் விண்ணப்பிக்கலாம் என தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டத்தில் பிரதம மந்திரி கிஷன் ஊர்ஜ சுராக்ஷ இவம் உட்டான் மகாபியன் யோஜனா திட்டத்தின் கீழ் 7.5 வரை திறன் கொண்ட மோட்டார் மத்திய அரசு மானியம் 30 சதம் ,மாநில அரசின் மானியம் 30 சதம் என மொத்தம் 60 சத மானியம் வழங்கப்படுகிறது. மீதமுள்ள 40 சதவீதத்திற்கும் விவசாயிகளின் பங்களிப்பு போக மீதமுள்ள தொகைக்கு வங்கி கடனுதவி பெற்றுக்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக தமிழக அரசு மாநிலம் முழுவதும் 20 ஆயிரம் இலவச மின் இணைப்புடன் கூடிய மின் மோட்டார்கள் சூரிய மின் நிலையம் அமைக்க முன் வந்துள்ளது .இந்த திட்டத்தின் மூலம் 100 கிலோ வாட் சோலார் பேனல் பொருத்துவதன் மூலம் வருடத்திற்கு 14853 மின் உற்பத்தி பெறலாம் சூரிய மின்சக்தி உற்பத்திக்கு அரசு கொடுக்கும் தொகையை யூனிட்டுக்கு ஒரு ரூபாய் 2.28 இதன் மூலம் வருடத்திற்கு விவசாயிகளுக்கு 33 ஆயிரத்து 858 வருமானம் கிடைக்கும் .மின்வாரிய மின் கட்டமைப்பு செலுத்தப்பட்ட மின் ஆற்றலின் அளவுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை யூனிட்டுக்கு 50 பைசா ஆகும். ஒரு வருடத்தில் இந்த திட்டத்தில் ஊக்கத்தொகை மூலம் கிடைக்கப் பெறுகின்ற வருமானம் ரூ 13 ஆயிரத்து 750 ஆகும்.
ஒரு வருடத்தில் ஒரு விவசாயி ரூபாய் 40 ஆயிரம் வருமானம் பெறலாம் .100 கிலோ வாட் சூரிய மின்சக்தி சாதனத்தை அமைப்பதற்கான செலவு ரூபாய் 5 லட்சம். இதில் மத்திய அரசின் 30 சதவீத மானியமாக மாநில அரசு 80% மானியம் வழங்கப்படுகிறது. 5 வருட இலவச பராமரிப்பு செய்யப்படும் .அதிகபட்சமாக 7.5 எச்பி திறன் வரை உள்ள இலவச மின் இணைப்புடன் கூடிய மின்மோட்டார் களுக்கு இந்த திட்டம் பொருந்தும். இந்த திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் .மேலும் விவரங்களுக்கு திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மூன்றாவது தளத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை உதவியாளரை 938529o 534என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.