துவரை விதை நுண்ணூட்ட உரங்கள் மானியத்தில் பெற அழைப்பு!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கோடை மழை பெய்து வருகிறது. ஒவ்வொரு வட்டாரத்தில் துவரை ஆனால் விதைப்பு 1500 ரிக்டரில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் குறைந்த மகசூல் கிடைத்துவந்தது. இதை கருத்தில் கொண்டு நாற்று விட்டு நடவு செய்யும் புதிய முறை மாநிலத்திலேயே முதன்முறையாகும். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வட்டாரத்தில் ஆரம்பித்து மற்ற மாவட்டங்களுக்கும் பரவலாக்கப்பட்டு வருகிறது. இதற்கு தேவையான விதைகள் அனைத்தும் வேளாண் விரிவாக்க மையத்தில் பி ஆர் ஜி 1, பி ஆர் ஜி 5 மற்றும் கோ 8 ஆகிய ரகங்கள்,50 சதவீத மானிய விலையில் விவசாயிகள் பெறுவதற்காக ரோஜர் வேளாண் விரிவாக்க மையத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் துவரைப் பயிர் நோய் மற்றும் பூச்சித் தாக்குதல் இல்லாமல் இங்கு வளரும் உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம் பாஸ்போபாக்டீரியா பொட்டாசியம் டிரைகோடெர்மா மட்டும் பயிர் வளர்ச்சிக்கு தேவையான நுண்ணூட்டச் உரக் கலவையை 50 சதவீத மானிய விலையில் தற்போது ஓசூர் வேளாண் விரிவாக்க மையம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. எனில் ஓசூர் வட்டார விவசாயிகள் அனைவரும் தங்களுக்கு தேவையான விதை மற்றும் உயிர் உரங்களை வாங்கி பயன் அடையலாம் என ரோஜர் வேளாண்மை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பயிரிட்டுள்ள மாமரங்களில் பழ ஈ தாக்கம் காணப்படுகிறது. இந்த பொருட்களில் வெளிர் மஞ்சள் நிறத்தில் வீட்டு ஈக்கள் போன்று இருக்கும். முதிர்ந்த காய்கள் மீது இந்த ஈக்கள் முட்டைகளை தோளில் சூழுகி இடுகின்றன.பிறகு முட்டைகள் பொரிந்து, புழுக்கள் பழத்தின் சதை பகுதியை துளைத்துச்சென்று அதில் வளரும். இதனால், பழம் முழுவதும் அழுகி,மரத்திலிருந்து கீழே உதிர்ந்து விடும். இதை கட்டுப்படுத்த,கோடை உழுவு செய்வதன் மூலம், மண்ணுக்குள் இருக்கும்,கூட்டுப்புழுக்களை மண்ணின் மேல் பகுதிக்கு கொண்டு வருவதால்,சூரிய ஒளி மற்றும் பறவைகள் மூலம் அழி ந்துவிடும்.மரத்திற்கு பிடியில் விழுந்துகிடக்கும் தாக்கப்பட்டு பழங்களை சேகரித்து அழித்துவிட வேண்டும் பழ ஈயை கவரக்கூடிய மெதைல் என்ற திரவத்தை ஒரு லிட்டர் நீருக்கு ஒரு மில்லி என்ற விகிதத்தில் மாலத்தியான் என்ற பழ ஈ கொள்ளக்கூடிய பூச்சிக்கொல்லி மருந்து ஒரு லிட்டர் தண்ணீருக்கு ஒரு மில்லி மருந்து என்ற விதத்திலும் மொத்த கலவை 100 மி .லி . இருக்கும் அளவுக்கு 250 மி.லி. கொள்ளளவு உள்ள அகன்று வாய் கொண்டு பாட்டிலில் ஊற்றி அதன் கழுத்துப் பகுதியை ஒரு தொங்கும் கருவியால் இணைத்து மாந்தோப்புஹேக்டருக்கு 24 என்ற எண்ணிக்கையில் வைப்பதன் மூலம் மெத்தையில் யூனினால் திரவத்தால் ஆண் ஈக்கள் கவரப்பட்டு மாலத்தியான் பூச்சிக்கொல்லி மருந்தினால் சாக அடிக்கப்படுகிறது இக்கலவை. 15 நாட்களுக்கு ஒரு தடவை புதிய கலவை கொண்டு மாற்ற வேண்டும். மார்ச் முதல் ஜூலை வரை தொடர்ந்து செய்தால் பழ ஈ தாக்குதலில் கணிசமாகக் குறைக்க முடியும்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
Share on google
Google+
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories