பனைமரம் நடவுக்கு 100 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது!

தமிழக அரசின் மாநில மரம் என்ற அந்தஸ்தைப் பெற்றப் பனைமரம் நடவு செய்ய விரும்பும் விவசாயிகளுக்கு 100சதவீதம் மானியம் வழங்கப்படும் எனத் தோட்டக்கலைத்துறை அறிவுறுத்தியுள்ளது.

பனை மரம் (Palm tree)
வெயில் காலத்தில் நம்மை பாதுகாக்க இயற்கை அளித்துள்ள வரப்பிரசாதமே பனைமரம். 1978ல் தமிழக அரசால் மாநில மரமாக அறிவிக்கப்பட்டு தொன்று தொட்டு பயிரிடப்பட்டு வரும் ஒரு மரப்பயிர்.60 முதல் 100 ஆண்டு வரை நமக்கு ஏதாவது ஒரு வகையில் பயனுள்ளதாக இந்த மரம் உள்ளது.இந்த மரத்தை வளர்க்க அரசு மானியம் தந்து உதவுகிறது என்றார்.

இதுகுறித்து, தோட்டக்கலை உதவி இயக்குனர் திவ்யா கூறியதாவது:-
விவசாய நிலங்களில் பனை மரங்களை அதிகரிக்கும் நோக்கில் தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம் மூலம் பனை விதைகள் முழு மானியத்தில் வழங்கப்படுகிறது.

3 மாதப் பராமரிப்பு (3 months maintenance)
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சங்கரமநல்லூர் மடத்தில் உள்ள அரசு தோட்டக்கலைப்பண்ணையில் தேர்வு செய்யப்பட்ட பழங்களை 3 மாதம் வரை வைத்து பராமரித்து அவை சிறிது வளர்ந்த பின்பு பைகளில் அடைக்கப்பட்டு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் வழங்குகிறது எனவே

தேவைப்படும் விவசாயிகள் தற்போது பனை நடவுக்கு நல்ல சூழ்நிலை இருப்பதால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பனை விதைகளை தங்கள் தோட்டங்களில் வளர்க்கலாம்.

தேவைப்படும் ஆவணங்கள் (Documents required)
சிட்டா
அடங்கல்
உரிமைச்சான்று
ரேஷன் கார்டு
ஆதார்
பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 2

பனை விதைகளை மானியத்தில் பெற விவசாயிகள் மேலேக் கூறிய ஆவணங்களுடன் மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலை அலுவலகத்தை அணுகலாம். உழவன் செயலியிலும் பதிவு செய்யலாம். கூடுதல் விவரங்களுக்கு உதவி தோட்டக்கலை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

5 கோடி (5 crore)
தமிழகத்தில் 5.1 கோடி பனைமரங்கள் உள்ளன. பனைமரத்திலிருந்து பதநீர், பனம்பழம், ஓலை, நார், மட்டை, நுங்கு, பனைவெல்லம், பனங்கற்கண்டு என பலவித பொருட்கள் பெறப்படுகின்றன. தரிசு நிலங்களில் சீமைக் கருவேல மரங்கள் வளர்வதைத் தவிர்க்க பனைமரங்களை விவசாயிகள் விளைவிக்கலாம். நன்கு பழுத்த மற்றும் முதிர்ந்த பழங்களிலிருந்து பனங்கொட்டைகளைப் பிரித்தெடுக்கலாம் இதில்

 

300 மரங்கள் (300 trees)
தரிசு நிலங்களில் சீமைக் கருவேல மரங்கள் வளர்வதைத் தவிர்க்க பனைமரங்களை விவசாயிகள் விளைவிக்கலாம். நன்கு பழுத்த மற்றும் முதிர்ந்த பழங்களிலிருந்து பனங்கொட்டைகளைப் பிரித்தெடுக்கலாம்.

அதனை ஊட்டச்சத்து கரைசல் வளர்ச்சி ஊக்கிகளுடனோ அல்லது 0.1 சதவீதம் கார்பன்டாசிம் கரைசலில் ஊற வைத்து விதை நேர்த்தி செய்து விதைக்கலாம்.
ஒரு ஏக்கரில் 300 மரங்களை நடலாம்.

பருவமழை காலங்களில் எண்ணெய் வித்துக்கள், பயறு வகைகள் மற்றும் பழப்பயிர்களை ஊடுபயிராகப் பயிர் செய்யலாம். பனைமரங்கள் தற்போது அழிந்து வரும் நிலையில் உள்ளதால், அவற்றைப் பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், மண்ணரிப்பை தடுத்து நாட்டின் நீர் வளத்தைப் பாதுகாக்க நாம் உதவ முடியும் என்று கூறினார்.

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories