புங்கன் நடவுக்கு ரூ.21,000 மானியம் – அதிரடி அறிவிப்பு!

புதுக்கோட்டை மாவட் டத்தில் புங்கன் மற்றும் வேம்பு கன்றுகள் நடவு செய்யும் விவசாயிகளுக்கு ரூ.423-லட்சம் மானியம் வழங்கப்பட்டு வருவதாக வேளாண்மை இணை இயக்குநர் பொறுப்பு வகிக்கும் மா. பெரியசாமி கூறினார்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வட்டாரத்தில் நெய்வத்தளி கிராமத்தை சேர்ந்த மோக நாதன் என்ற விவசாயின் வயலில் வேளாண்மைத்துறை துணை இயக்குநர் சுருளிமலை, ஆலோசகர் திருப்பதி ஆகியோர் முன்னிலை யில் ஒரு எக்டர் பரப்பில் புங்கள் கன்றுகள் நடவு செய்யப்பட்டன.

நடவுப்பணிகளை ஆய்வு செய்த வேளாண்மைத்துதுறை இணை இயக்குநர் மா. பெரியசாமி , நடவுக்கு முன்பு உழவு செய்தல், குழி எடுத்ததல் நடவு மற்றும் நடவுக்கு பின்பு உள்ள நிலைகளைப் புகைப்படம் எடுத்து ஆவணப்படுத்தவும் அறிவுரை வழங்கினர்.
மேலும் அவர் கூறியதாவது:

எண்ணெய் வித்து மரப்பயிர் சாகுபடி திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை மாவட் டத்தில் 2020-21ஆம் ஆண்டு புங்கன் மற்றும் வேம்பு கன்றுகள் நடவு செய் யும் விவசாயிகளுக்கு ரூ.423-லட்சம் மானியம் வழங்கப்பட்டு வருகிறது என்றார்.

இத்திட்டத்தின்கீழ் 5மீx4மீ இடைவெளியில் எக்டருக்கு 500 புங்கன் கன்றுகள் நடவு செய்வதற்கு மானியமாக ரூ.20000ம் வழங்கப்படும் என்றார்.

இதன் ஊடுபயிராக உளுந்து சாகுபடி செய்ய ரூ 1000 என மொத்தம் எக்டருக்கு ரூ.21,000 வழங்கப்படுகிறது.

மானியம் விவசாயிகளின் வங்கி கணக்கில் பின்னேற்பு மானியமாக வழங்கப்படும் என்றார்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories