மானிய திட்டத்தில் விவசாயிகள் பயன்பெறலாம்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் 2o2o -21 ம் ஆண்டு தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம் மற்றும் நீடித்த நிலையான வேளாண்மை இயக்கத்தின் கீழ் வசூரில் உள்ள உயிர் உர உற்பத்தி மையத்தை எதிராக உயிர் உரம் உற்பத்தி மையமாக மாற்றபட்டு ஆண்டுக்கு 50,000 லிட்டர் உற்பத்தி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது நடப்பாண்டில் பயிர்களுக்கு ஏற்றவாறு அசோஸ்பைரில்லம் ரைசோபியம் பாஸ்போ பாக்டீரியா உட்பட ஐந்து வருடங்களில் 50 ஆயிரம் லிட்டருக்கு தற்போதுவரை 6400 லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு 17 வட்டாரங்களுக்கு 1500 லிட்டர் விநியோகம் செய்யப்பட்டுள்ளது இங்கு உற்பத்தி செய்யும் விநியோகம் செய்யப்பட்டு திரவம் உயிர் உரங்களை விவசாயிகள் தங்கள் வட்டாரங்களில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையங்களை எண்ணிக்கையை தேவைக்கு ஏற்றவாறு வாங்கி பயன்பெறலாம் என திருவண்ணாமலை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

தேசிய அமையலாம் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் நீலகிரி மாவட்டத்தில் நிரந்தர பந்தல் சாகுபடி அங்கக முறையில் காய்கறி சாகுபடி, மிதவெப்ப மண்டல பயிர் சாகுபடியும் ,இலை காய்கறி சாகுபடியில் ,மண்வள மேம்பாடு போன்றவற்றிற்கு மானியம் வழங்கப்படுகிறது ஒருங்கிணைந்த தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ் வீரிய ஒட்டுரக காய்கறி சாகுபடி, கிவி பழம் நாற்றுகள் மற்றும் இடுபொருள்கள் வழங்குதல், வாசனை திரவியப் பயிர்கள் சாகுபடி, நீர் அறுவடை கட்டுமானம் அமைத்தல், பசுமை குடில் அமைத்தல் ,கார்னேஷன் ,ஜெர்பரா ,ரோஜா ,லில்லியம் போன்ற மலர்கள் சாகுபடிக்கு நடவு பொருள் மானியம் வழங்குதல் நிரந்தர மண்புழு உரம் கூடாரம் அமைத்தல் தேனீ வளர்ப்புப் பெட்டிகள் தேன் எடுக்கும் இயந்திரம் வழங்குதல் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதில் பயனடைய விரும்பும் விவசாயிகளுக்கு மானிய தொகை விவரம் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் போன்ற முழு விவரங்களை அறிந்துகொள்ள தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம் என தோட்டக்கலை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories