மானிய விலையில் நெல் விதைகள் – பயன்படுத்திக்கொள்ள விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது!

தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் மூலம் நெல் விதைகள் மானிய விலையில் வழங்கப்பட உள்ளன.இதனை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து உடுமலை வேளாண் உதவி இயக்குனர் தேவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

உடுமலை வட்டார வேளாண்மை உழவர் நலத்துறை மற்றும் தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் மூலம் உளுந்து, கம்பு ,கொண்டைக்கடலை பயிர்களுக்கு செயல் விளக்க திடல் அமைத்தல், நுண்ணூட்ட உரம் வழங்கல்,சிறு தானியங்கள், பயிறு வகைகள், உயிரி பூச்சிக்கொல்லி வழங்குதல், கைத்தெளிப்பான் ஆகியவை 50 சதவீத மானிய விலையில் வழங்கப்பட உள்ளன.

மானியத்தில் உதவிகள் (Grants in aid)
மேலும் தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் மூலம் நெல் விதை மானிய விலையில் வழங்கப்பட உள்ளது எனவே

தென்னை வளர்ச்சி வாரியம் மூலம் பூச்சி நோய் தாக்கி மகசூல் குறைவான மரங்களை வெட்டி அகற்றிவிட்டு புதிய கன்றுகள் நடவும் மானியம் வழங்கப்படுகிறது.

மக்காச்சோளம் படைப்புழுவை கட்டுப்படுத்த உயிரி பூச்சிக்கொல்லிகள் மானிய விலையில் வழங்கப்படுகின்றன இதில்

வரப்பு பயிர் சாகுபடிக்காக உளுந்து,பச்சைப்பயிறு விதைகள் உள்ளன மற்றும்

பசுந்தாள் உரம்,தக்கைப்பூண்டு விதைகள் உள்ளன.
விவசாயிகளுக்கு அழைப்பு (Call to farmers)
ஆலம்பாளையம்,குருப்பநாயக்கனூர், தும்பலப்பட்டி, மொடக்குப்பட்டி, குறுஞ்சேரி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த சிறு குறு விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories