மின்மோட்டர் பைப்லைன் அமைக்க ரூ.15,000 மானியம் எப்படி விண்ணப்பிக்கலாம்!

விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் மின் மோட்டாருக்கான பைப் லைன் அமைக்க ரூ.15,000 மானியம் வழங்கப்படுவதால், பயன்படுத்திக் கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது இதில்

விழுப்புரம் மாவட்ட தாட்கோ அலுவலகம் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த விவசாயிகள் மின் மோட்டார் மற்றும் பைப் லைன் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்.

விவசாயிகளுக்கு புதிய மின் மோட்டார் வாங்க 10 ஆயிரம் ரூபாயும், பைப் லைன் அமைக்க 15 ஆயிரம் ரூபாயும் அரசு மானியமாக வழங்கப்பட உள்ளது.

இந்த மானியத் தொகையைப் பெற http:/application tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தின் வாயிலாக விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்றார்.

தேவைப்படும் ஆவணங்கள் (Documents required)
சிறு,குறு விவசாயி சான்றிதழ்

அடங்கல்

கிணறு அமைந்துள்ள நிலவரை படம்

மின்சார இணைப்பு அட்டைவிபரம்

வங்கிப் புத்தகத்தின் முதல் பக்க நகல்

மேலேக் கூறப்பட்ட ஆவணங்களுடன் விவசாயிகள் தாட்கோ இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் மற்றும்

தேர்வு நடைமுறை (Selection procedure )
இவ்வாறு ஆன்லைன் மூலம் பெறப்பட்ட விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சியரைத் தலைவராகக் கொண்ட தேர்வு குழுவினரின் ஆய்வுக்கு உட்படுத்தப்படும். இந்தகுழுவினரால், தேர்வு செய்யப்படும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு மானிய தொகை வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories