ரூ.10 லட்சம் வரை மானியம் கிடைக்கும் நல்ல கைத் தொழில்

 

உணவுத் துறையில் ஏதேனும் தொழில் தொடங்கி வருமானம் பார்க்க ஆசைப்படுபவர்களை ஊக்குவிக்க அரசு 10 லட்சம் ரூபாய் வரை மானியம் வருகிறது. எனவே இந்தத் திட்டத்தைத் தெரிந்துகொண்டு, உணவுப் பதப்படுத்தும் தொழிலைத் தொடங்க நாமும் முன்வருவோம்.

இந்தியாவில் உணவுப் பதப்படுத்துதல் துறை (Food Processing) தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறது.நாடு முழுவதும் தானியங்கள், காய்கறிகள், பழங்கள், பால், இறைச்சி, மாசாலாப் பொருட்கள் என பலவகையான உணவுப் பொருட்களை பதப்படுத்துவதற்கான மார்க்கெட் இந்தியாவில் வளர்ந்துள்ளது.
இத்தனை வாய்ப்புகள் இருக்கும்போதிலும், புதிதாக தொழில் முனைவோர் உணவுப் பதப்படுத்துதல் துறையில் பெரிதாக களம் இறங்குவதில்லை என்றார்.

எனவே, உணவுப் பதப்படுத்துதல் துறையில் புதிய தொழில்களை ஊக்குவிக்க PMFME (PM Formalisation of Micro food processing Enterprises) திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

உணவுப் பதப்படுத்துதல் துறையில் தொழில் தொடங்க விரும்புவோருக்கு PMFME திட்டத்தின் கீழ் கடன் மற்றும் மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் கடன் பெற்று உணவுப் பதப்படுத்துதல் ஆலைகளை அமைக்கலாம் மற்றும்

தகுதி
18 வயதை தாண்டிய அனைவருமே PMFME திட்டத்தின் கீழ் கடன் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்.

உணவுப் பதப்படுத்துதல் சார்ந்த புதிய ஆலைகளை அமைப்பதற்கு மட்டுமல்லாமல் ஏற்கெனவே இருக்கும் ஆலைகளை மேம்படுத்துவதற்கும் PMFME கீழ் உதவி பெறலாம் இதில்

இத்திட்டத்தின் கீழ், தொழிலுக்கான மூலதனத்தில் 35% மானியமாகப் பெறலாம். அதிகபட்சமாக 10 லட்சம் ரூபாய் வரை பெற்றுக்கொள்ளலாம். PMFME திட்டத்தின் கீழ் கடன் பெற விரும்புவோர், www.pmfme.mofpi.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்தார்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories