கன்னியாகுமரி மாவட்டத்தில் 2021 2022 நிதி ஆண்டில் 305 மீட்டர் பரப்பளவில் ரூபாய் 1.83 கோடி மானியத்தில் நுண்ணீர் பாசன திட்டம் செயல்பட உள்ளது இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் சிறு குறு விவசாயிகளுக்கு 100 சத மானியத்தில் நுண்ணீர் பாசன அமைப்புகளை அமைக்க எக்கடர் ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூபாய் ஒரு லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது சிறு குறு விவசாயிகள் காய்கறி பயிர்களுக்கு 2.5 ஏக்கரில் இதர பயிர்களுக்கு 5 ஏக்கர் வரையில் 100% மானியத்தில் நுண்ணீர் பாசன அமைப்புகளை தங்கள் நிலங்களில் அமைத்துக்கொள்ளலாம் இதர விவசாயிகளுக்கு 75 சத மானியத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது கன்னியாகுமரி மாவட்டத்தில் அகஸ்தீஸ்வரம் ராஜமங்கலம் தோவாளை தக்கலை திருவட்டாறு குடித்தனம் கில்லியூர் முன்சிறை மேல்புறம் ஆகிய ஒன்பது வட்டாரங்களிலும் இந்த திட்டம் மாவட்ட ஆட்சியரின் அறிவுரையின்படி தோட்டக்கலை துணை இயக்குனர் செயல்படுத்தப்பட்டு வருகிறது பழங்கள் காய்கறி பயிர்கள் நறுமணப் பயிர்கள் மலைப்பயிர்கள் குறிப்பாக தென்னை வாழை கோகோ முதலே பயிர்களுக்கு இத்திட்டம் நல்ல பயன் தரும் இத்திட்டத்தில் பயன்பெறுவர் பயன்பெற விரும்பும் விவசாயிகள் குடும்ப அட்டை கிராம அடங்கல் ஆதார் கார்டு மண் மற்றும் நீர் பரிசோதனை சான்று கணினி சிட்டா நில வரைபடம் சிறு குறு விவசாயிகளுக்காக இருப்பின் அதற்கான தாசில்தாரிடம் இருந்து பெறப்பட்ட சான்று மற்றும் ஆதிதிராவிடர் பழங்குடியினர் என்றால் அதற்கான சான்று போன்ற ஆவணங்களின் நகல் உடனே அருகில் இருக்கும் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
