வேளாண்மை செய்திகள்!

தமிழக அரசின் தோட்டக்கலைத் துறை சார்பில் விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் பயன்பெற விரும்பும் மதுரை மாவட்டம் செல்லம்பட்டி பகுதியை சேர்ந்த தோட்டக்கலை விவசாயிகள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது .அதன்படி இந்த திட்டத்தில் நடப்பாண்டில் காய்கறிகள் இனத்தில் 100 ஏக்கர். பழங்கள் இனத்தில் 25 ஏக்கர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு திட்ட உதவி அளிக்கும் வகையில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது .மேலும் சிப்பம் கட்டும் அறையில் குறைந்த செலவிலான வெங்காய சேமிப்பு கூடம். தேனீ வளர்ப்பு .விவசாய உபகரணங்கள் ஆகியவற்றிலும் விவசாயிகள் பயன்பெறலாம் .இந்தத் திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் செல்லம் பட்டியில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் .அத்துடன் சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர் பாசன வசதி ஏற்படுத்த விருப்பமுள்ள விவசாயிகளுக்கு செல்லம்பட்டி வட்டாரத்திற்கு 378 ஏக்கர் வரையில் ஒதுக்கப்பட்டுள்ளது. முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இந்த திட்டம் செயல்பட உள்ளதாக உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொடிவகை காய்கறி பயிர்களான பாகற்காய். சுரைக்காய், பீர்க்கங்காய், புடலங்காய், கோவக்காய் போன்ற பயிர்கள் கடந்த நிதியாண்டில் சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளது இந்த பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள் பொதுவாக நல்ல லாபம் அடைய பந்தல் முறையில் சாகுபடி செய்வது வழக்கம்.

பந்தல் சாகுபடி பலனை இருபது முதல் இருபத்தைந்து ஆண்டுகள் வரை பெற விரும்பும் விவசாயிகள் அல்லது சிமெண்ட் கான்கிரீட் தூண்கள் மூலம் நிரந்தர பந்தல் அமைப்பார்கள். அதுபோல நிரந்தர பந்தல் அமைக்கும் போது எக்டருக்கு சுமார் நான்கு லட்சம் வரை ஆரம்ப செலவு ஆவதால் தமிழக அரசு 5o% அதாவது ஏக்கருக்கு 2 லட்சம் மானியமாக வழங்குகிறது தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம் 2021 முதல் 2022 நிதியாண்டில் விவசாயிகளுக்கு நிரந்தர பந்தல் அமைக்க மாவட்டத்துக்கு ரூ 28 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது மானியம் பெற விரும்பும் விவசாயிகள் உழவன் செயலி முகாம் மூலமும் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர்களை தொடர்பு கொண்டு முன்னேறும் பதிவேட்டில் பதிவு செய்து பயன் பெறலாம். பின்னேற்பு மானியமாக மானியம் வழங்கப்படுவதால் முதலில் வேண்டிய நிலை ஆவணங்களுடன் விருப்ப கடிதம் வட்டார அலுவலகங்களில் முதலில் வழங்கி பணி ஆணை பெற்று 9o நாட்களில் பணி நிறைவு பெற்ற பிறகு கள ஆய்வு மேற்கொண்டு பிறகு மானியம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக அனுப்பப்படும் மானியம் பெற விரும்பும் விவசாயிகள் தங்களது வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர்களை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories