வேளாண் பணிகளுக்கு குறைந்த வாடகையில் எந்திரங்கள்!

 

 

புதுக்கோட்டை மாவட்டத்தில் மானாவாரி கிணறு மற்றும் இதர பாசன விவசாயிகள் நில உழவு பணியிலிருந்து அறுவடை பணிகள் வரை இயந்திரங்களை பயன்படுத்தி பணிகளை மேற்கொள்ள வேளாண்மை இயந்திரமயமாக்கல் பணிகளை வேளாண்மை பொறியியல் துறை மேற்கொண்டு வருகிறது இதன் மூலம் விவசாயிகளுக்கு இயந்திரங்கள் வாடகைக்கு வழங்கும் திட்டத்தில் உழவு இயந்திரங்களின் ஒரு மணி நேரத்திற்கு ரூபாய் 140 மண் அள்ளும் இயந்திர ங்கள் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை 840 மற்றும் மினி பொக்லைன் எந்திரம் ஒரு மணி நேரத்திற்கு 660 புதிய நெல் அறுவடை இயந்திரம் செயின் மாடல் ஒரு மணி நேரத்திற்கு 1415 வழங்கப்பட்டு வருகிறது மேலும் உழவை எந்திரங்களில் இணைப்பு கருவிகளாக கடலை பிடுங்கும் இந்திரன் கடலை கொடியிலிருந்து கடலைக்காய் பறிக்கும் இயந்திரம் விதை விதைக்கும் இயந்திரம் கரும்பு தோள்களையும் தூளாக்கும் எந்திரம் வைக்கோல் கட்டும் இயந்திரம் என பல்வேறு புதிய தொழில்நுட்பக் கருவிகளும் டிராக்டர் உடன் சேர்ந்து ஒரு மணி நேரத்திற்கு ரூபாயை 340 என்கிற குறைந்த வாடகையில் வழங்கப்பட்டு வருகிறது சிறுபாசன திட்டத்தில் நிலத்தடி நீர் ஆய்வு மேற்கொள்ள ஒரு பணியிடத்திற்கு ரூபாய் 100 க்கும் ஆழ்துளை கிணறு அமைக்க ரோட்டரி ரயில் ஒரு மீட்டருக்கு 130 என அரசு நிர்ணயித்துள்ளது நிர்ணயித்துள்ள குறைந்த வாடகையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது எனவே புதுக்கோட்டை மற்றும் இலுப்பூர் வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட வட்டார விவசாயிகள் திருக்கரத்தில் உள்ள வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் அறந்தாங்கி வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட விவசாயிகள் அறந்தாங்கியில் உள்ள வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories