விவசாயம் என்பது மனிதர்களின் அத்தியாவசிய தொழில். அத்தகைய விவசாயத்தில் அக்காலம் முதல் இக்காலம் வரை பலவிதமான கருவிகள்கழிவுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

அதிலும் இன்றைய நவீன காலத்தில் புதிய கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. இதனால் விவசாயிகள் பல வேலைகளை எளிதாக செய்ய முடிகிறது.

அக்காலத்திலும் சில கருவிகள் பயன்படுத்தப்பட்டன. அவையும் விவசாயத்திற்கும் மிக முக்கியமானவை

தான். அப்படிப்பட்ட விவசாய கருவிகளில் ஒன்றுதான் தென்னை மர மரம் ஏறும் கருவி. அதைப்பற்றிய தகவல்களை இங்கு காணலாம்.

தென்னை உள்ளிட்ட உயரமான மரங்களில் காய்கள் பறிப்பது மிகவும் கடினமாக இருக்கும். அப்படிப்பட்ட சிரமத்தை தவிர்ப்பதற்காகவே இந்த தென்னை மரம் ஏறும் கருவி பயன்படுத்தப்படுகிறது.

இந்த கருவியின் மூலம் பாதுகாப்பாக மரத்தின் உச்சிக்கு சென்று தேவையான காய்களை பறித்து பயன்பெறலாம்.

இதன்மூலம் குறைந்த நேரத்தில் மரத்தில் ஏறி விடலாம் ஒரு நாளைக்கு 50 முதல் 60 மரங்கள் வரை ஏறி காய்களைப் பறிக்கலாம்.

மானியம்

மதுரை மாவட்டம் கல்லுப்பட்டி வட்டாரத்தில் வேளாண்மைத் துறையின் அட்மா திட்டத்தின் தென்னை மரங்களில் இளநீர் காய்களை பறிக்கும் கருவி 100 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது.

எப்படி பயன் பயன்பெறுவது?

முதலில் 4 ஆயிரம் மதிப்பிலான மரம் ஏறும் கருவியை விவசாயிகள் வாங்க வேண்டும்.

கருவி வாங்கிய பிறகு ஆதாரம் கணினியின் சிட ரா வங்கி கணக்குப் புத்தகத்தின் முதல் பக்க நகலுடன் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை தொடர்பு கொள்ள வேண்டும்.

பிறகு ஆவண விவசாயி மானிய தொகை வரவு வைக்கப்படும்.

முன்னுரிமை அடிப்படையில் இந்த மானியம் வழங்கப்படும்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories