தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவு 2020 -2021 ஆண்டு காரீப் சந்தை பருவத்தில் 45 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஆயுத பூஜை ,விஜயதசமி உள்ளிட்ட விழாக்கள் தொடர்ச்சியாக வருவதால் சனிக்கிழமை,ஞாயிற்றுக்கிழமை காரணமாகவும், ஈரோடு மஞ்சள் மார்க்கெட்டுக்கு தொடர்ந்து ஆறு நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது. அதன்படி வருகிற 14-ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை மார்க்கெட்டுகள் செயல்படாது. இருபதாம் தேதி முதல் வழக்கம் போல மஞ்சள் மார்க்கெட் ஏலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய மாநில அரசுகளின் வேளாண் திட்டங்களை விவசாயிகள் பயன்படுத்த அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது .அனைவரும் வேளாண் திட்டத்தில் பயனடைய வேண்டும் என்பதே இதன் நோக்கம் .முதற்கட்டமாக திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் வட்டாரத்தில் மணலூர்,பஞ்சம்பட்டி ,வக்கம்பட்டி ,முதலைப்பட்டி, பாளையங்கோட்டை ஆகிய பஞ்சாயத்துகள் தேர்வாகியுள்ளன. இங்கு உள்ள சிறு குறு ஆதிதிராவிடர் மற்றும் பெண் விவசாயிகள் தங்கள் விவரங்களை ஒரு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பதிவு செய்து பயன் பெறலாம்.
தற்போது வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளது. தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதிகளில் விவசாயிகள் மானாவாரி நிலங்களை உழவு செய்து தயார் நிலையில் வைத்துள்ளனர். இந்த சூழலில் சோளம், கம்பு ,குதிரைவாலி, சாமை போன்ற சிறுதானியங்களையும் அல்லது தட்டைப்பயிறு ,பாசிப்பயறு, உளுந்து, கொள்ளு ஆகிய பயிர்களையும் சாகுபடி செய்யலாம். சின்னமனூர் வேளாண் விரிவாக்க மையத்தில் நிலக்கடலை, பாசிப்பயறு, தட்டைப்பயறு ,உளுந்து விதைகள் போதிய அளவு இருப்பு உள்ளது .சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகள் 50 சதவீத மானியத்தில் விதைகளைப் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.