50% மானியத்தில் அம்மா இருசக்கர வாகனம் – உதகை பெண்களுக்கு முன்னுரிமை!

தமிழக அரசின் அம்மா இருச்சகர வாகனத்திட்டத்தில் (AMMA Two Wheeeler Scheme) 50 சதவீத மானியத்தில், இருசக்கர வாகனம் பெற பணிக்கு செல்லும் அல்லது சுயதொழில் செய்யும் பெண்கள் விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தகுதிகள் (Qualifications)
தமிழக அரசின் அம்மா இருசக்கர வாகனத் திட்டத்தின் கீழ் பயனடையும் பயனாளிகளுக்கு வயது வரம்பு 18 முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும் எனவும்,

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணி புரிபவராகவோ அல்லது சுயதொழில் செய்பவராகவோ இருத்தல் வேண்டும்.

பயனாளிகளின் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

இருசக்கர ஓட்டுனர் உரிமம் பெற்று இருத்தல் கட்டாயம்.

திட்டம் பணிக்கு செல்லும் மற்றும் சுயதொழில் செய்யும் பெண்களுக்கு 50 சதவீதம் அல்லது ரூ.25 ஆயிரம் மானியம் வழங்கப்படும்.

பயனாளிகள் வாங்கும் இருசக்கர வாகனங்கள் 1.1.2018-ந் தேதிக்கு பிறகு உற்பத்தி செய்யப்பட்டவையாக இருப்பது அவசியம்.

125 சி.சி. (CC)திறனுக்கு உட்பட்டதாக இருத்தல் வேண்டியது அவசியம்.

இந்திய வாகன சட்டத்தின்படி பதிவு செய்யப்பட்ட வாகனமாக இருக்க வேண்டும்.

முன்னுரிமை (Priority)
இத்திட்டத்தில் விதவைகள் மற்றும் ஆதரவற்ற மகளிருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

தேவைப்படும் ஆவணங்கள் (Documents)
வயது வரம்பு சான்று

இருப்பிட சான்று

ஓட்டுநர் உரிமம்

வருமான சான்று

பணிபுரிவது மற்றும் சுய தொழில் புரிவதற்கான சான்று

ஆதார் அட்டை

கல்வி சான்று

(குறைந்தபட்ச தகுதி 8-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி)

பாஸ்போர்ட் அளவு புகைப்படம்

விதவை

ஆதரவற்ற மகளிர்

35 வயதுக்கு மேல் திருமணம் ஆகாத பெண்கள், திருநங்கைகள் ஆகியோருக்கான சான்றிதழ்

ஜாதி சான்றிதழ்

மாற்றுத்திறனாளிகள் சான்று

இருசக்கர வாகனத்திற்கான விலைப்பட்டியல்

தகுதியுள்ள பெண்கள் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகம், பேரூராட்சி மற்றும் நகராட்சி அலுவலகங்களில் விண்ணப்பப் படிவங்களை பெற்று நேரடியாகவோ அல்லது பதிவு தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories