மீன்கள் நன்றாக வளர்ச்சி அடைய ஏற்ற உணவுகள்!

கரும்பில் பிசினை போ ல வந்து மகசூலை அதிகமாக பாதிக்கிறது அதை எவ்வாறு சரி செய்யலாம்?

பச்சை மிளகாய் 250 கிராம் இஞ்சியை 150 கிராம் பூண்டு 250 கிராம் மூன்றையும் சேர்த்து அரைத்து இரண்டு லிட்டர் மாட்டு கோமியத்தில் ஊறவைத்து வடிகட்டி எடுத்து 300 மில்லி எடுத்து 10 லிட்டர் நீருடன் கலந்து 2 அல்லது 3 முறை தெளிக்கலாம்.

வேப்பங்கொட்டை கரைசலை தெளிப்பதால் கரும்பில் பிசின் போல் இருப்பதை குறைக்கலாம்.

இயற்கை களைக்கொல்லி தயாரிக்கும் முறைகள் எவை?

10 லிட்டர் கோமியம் 2 கிலோ எ ருக்கும் இலை 2 கிலோ கல் உப்பு அரைகிலோ சுணாம்பு கல் சுண்ணாம்பு பவுடர் சேர்க்கக்கூடாது தேவைக்கேற்ப எலுமிச்சம் பழம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

எருக்க இலை 2 கிலோ நன்றாக இடித்து அல்லது மிக்சியில் போட்டு அரைத்து அவற்றை கோமியத்தில் ஊற விடவும்.

பிறகு சுண்ணாம்பு கல்லையும் அவற்றில் போட்டு ஊற விடவேண்டும் கல் உப்பை தூளாக்கி அவற்றுடன் கலந்து ஒரு வாரம் வரை ஊற வைக்கவும்.

களைக்கொல்லி கரைசலை ஒரு லிட்டர் 9 லிட்டர் தண்ணீர் என்ற விகிதத்தில் கலந்து கலைகள் நன்கு நனையுமாறு தெளிக்க வேண்டும் மேலும் துடைக்கும் போது ஒரு எலுமிச்சம் பழத்தின் சாறு கலந்து தெளிக்க வேண்டும்.

நெல்லிக்காயில் இலைப்பேன் தாக்குதலை இயற்கை முறையில் கட்டுப்படுத்துவது எப்படி?

நெல்லிக்காய் இலைப்பேன் இயற்கை முறையில் கட்டுப்படுத்த கற்பூரகரைசல் தெளிக்கலாம்.

மஞ்சள் நிற ஒட்டும் பொறியை வயலில் கட்டுவதன் மூலம் இலைப்பேன் தாக்குதலை குறைக்கலாம்.

முருங்கைக் கீரை நன்றாக பச்சை நிறம் பெற என்ன மாதிரியான இயற்கை உரம் கொடுக்கலாம்?

பஞ்சகாவ்யா கரைசலை தெளிக்கலாம் அல்லது நீர் பாசனம் வழியாக கொடுக்கலாம்.

ஜீவாமிர்தத்தை நீர் பாசனத்தில் கலந்து விடலாம் இதன்மூலம் கீரை இலைகள் பச்சையாக இருக்கும்.

மீன்கள் நன்றாக வளர்ச்சி அடைய என்ன உணவு கொடுக்கலாம்?

மீன்கள் சரியான வளர்ச்சி அடைய அரை கிலோ முதல் ஒரு கிலோ வரை அசோலா கொடுக்கலாம்.

தினமும் 10 வாழை இலைகளையும் 10 கிலோ புல் இரண்டையும் நறுக்கிப் பரவலாக குளத்திலும்போடலாம். இதனால் மீன்களின் வளர்ச்சி நன்றாக இருக்கும்.

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
Share on google
Google+
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories