மீன் வளர்க்க காசு – வாங்க நீங்கள் தயாரா!

கோவையில் பண்ணை குட்டைகள் அமைத்து திலேப்பியா மீன் வளர்க்க விரும்புபவர்களுக்கு 40 சதவீதம் மானியம் வழங்கப் படுவதாக மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி கூறியுள்ளார்.

உள்நாட்டு மீன் உற்பத்தியை அதிகரிக்க செய்து மீனவ விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மீன் வளர்ப்புக்கு தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் 40 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.

1,000 சதுர மீட்டரில் பண்ணை குட்டைகள் அமைத்து மரபணு மாற்றப்பட்ட திலேப்பியா மீன் வளர்ப்பில் ஈடுபட விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பண்ணை குட்டை அமைத்தல், மீன் குஞ்சுகள், மீன் தீவனங்கள், பறவைகளிடம் இருந்து மீன்களை காக்க வலை அமைத்தல் ஆகியவற்றுக்கு பின்னேற்பு மானியமாக ரூ.39 ஆயிரத்து 600 வழங்கப்படும்.

மற்ற மீன்களை காட்டிலும் மரபணு மேம்படுத்தப்பட்ட திலேப்பியா மீன்கள் குறைந்த பரப்பளவில் அதிகளவில் வளர்க்க முடியும். இவை அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்டதுடன் பண்ணை குட்டைகளில் வேகமாக வளரக் கூடியவை.

எனவே திலேப்பியா மீன் வளர்க்க ஆர்வமுள்ளவர்கள் ஆய்வாளர் அலுவலகத்தை இந்த 96555 06422 தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு ஈரோடு மீன்வளத் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை (0424-2221912) தொடர்பு கொள்ளலாம்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories