மீன் வளர்ப்பின்போது இந்த விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்கணும்?…

கவனிக்க வேண்டியவை மீன்களுக்கு குருணை வடிவிலான சரிவிகித உணவு, ஒரு கிலோ 22 ரூபாய் என்ற விலையில் கடைகளில் கிடைக்கிறது. தவிடு, பிண்ணாக்கைத் தீவனமாகக் கொடுப்பதைவிட இது செலவு குறைவாக இருக்கும்.

ஒரு மீனுக்கு அதன் உடல் எடையின் அளவில் 2 முதல் 5 சதவிகித அளவுக்கு தினமும் உணவு கொடுத்தால் போதும். மாதத்துக்கு ஒரு முறை கொஞ்சம் மீன்களை பிடித்து, அவற்றின் எடையைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஒரு நாளுக்கான தீவனத்தை மொத்தமாகக் கொடுக்காமல், இரண்டாகப் பிரித்து காலை, மாலை என இரண்டு வேளைகளிலும் கொடுக்க வேண்டும்.

இடத்தையும் நேரத்தையும் மாற்றாமல் ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் தினமும் தீவனத்தை இட வேண்டும். மீனின் மொத்த எடை எவ்வளவோ… கிட்டத்தட்ட அந்த அளவு தீவனத்தைத்தான் அது சாப்பிட்டிருக்கும் என்பது ஒரு கணக்கு. இதை வைத்து செலவுக் கணக்கைச் சரிபார்த்துக் கொள்ளலாம்.

உதாரணமாக ஒரு கிலோ எடையுள்ள மீன், அதன் வாழ்நாளில் ஒரு கிலோ முதல் ஒன்றே கால் கிலோ அளவுக்கு தீவனம் சாப்பிட்டிருக்கும். தேளி மீன்கள் ஆறு மாதத்தில் விற்பனைக்கேற்ற வளர்ச்சியை எட்டி விடும்.

கெண்டை மீன்கள் எட்டு மாதங்களில் வளர்ச்சியை அடைந்து விடும். மீன்கள், முக்கால் கிலோ அளவு எடைக்கு வந்தவுடன் விற்பனையைத் தொடங்கலாம்’ என்ற கணேசன் நிறைவாக.

நோய்கள் தாக்காது!

கெண்டை மீன்களைப் பெரும்பாலும் நோய்கள் தாக்குவதில்லை. நீர் மேலாண்மை, தீவன மேலாண்மையைச் சரியாகப் பராமரித்தாலே போதும். விராலுக்கு மட்டும் குளிர் காலத்தில் பூஞ்சண நோய் வரும்.

இந்நோய் தாக்கிய மீனின் உடம்பில் சாம்பல் பூசியதைப் போல வெண்மையான படலம் படிந்திருக்கும். நாளாக, நாளாக அது புண்ணாகி விடும். பிறகு பாதிக்கப்பட்ட மீன் கீழே இருக்க முடியாமல் நீர்மட்டத்துக்கு மேலே வந்து விடும்.

சோர்வாக இருக்கும், அப்படி பாதிக்கப்பட்ட மீன்களைப் பிடித்து தனியாக கொண்டு போய் புதைத்தோ அல்லது எரித்தோ விட வேண்டும்.

மஞ்சள், வேப்பிலை ஆகிய இரண்டையும் சம அளவில் எடுத்து, அரைத்துப் பொடித்து அவ்வப்போது குளத்தில் தூவி விட்டால் இந்நோய் எட்டியே பார்க்காது.
அதையும் தாண்டி வந்து விட்டால், ஒரு லிட்டர் ஃபார்மாலின் திரவத்தை 40 லிட்டர் நீரில் கலந்து குளத்தில் தெளித்தால், சரியாகி விடும்”

 

 

 

 

 

 

 

 

 

 

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories