மீன் வளர்ப்பின்போது தீவனம் வீணாகமல் இருக்க இந்த டிப்ஸை பயன்படுத்துங்கள்; நிச்சயம் உங்களுக்கு கைக்கொடுக்கும்..

** கெண்டை மீன்களில் கட்லா, ரோகு, மிர்கால், வெள்ளி கெண்டை (சில்வர் கார்ப்), புல் கெண்டை, சாதா கெண்டை என ஆறு ரகங்கள் உள்ளன.

** இந்த ஆறு ரக மீன்களும் தண்ணீரில் ஒரே இடத்தில் வசிப்பதில்லை. கட்லா, வெள்ளி கெண்டை ஆகியவை குளத்தின் மேல்புறத்திலும், ரோகு, புல் கெண்டை ஆகியவை குளத்தின் நடுப்பகுதியிலும் சாதா கெண்டை, மிர்கால் ஆகியவை குளத்தின் அடிப்பகுதியிலும் வசிக்கும் பழக்கத்தைக் கொண்டவை.

** அனைத்துப் பகுதிகளிலும் மீன்கள் இருந்தால்தான் அதிக எண்ணிக்கையில் வளர்க்க முடியும்.

** தாவர மிதவைகளில் சில புழு, பூச்சிகளும் உருவாகும். இவற்றை விலங்கின மிதவைகள் என்று சொல்வார்கள்.

** கட்லா மீன்கள் விலங்கின மிதவைகளையும், வெள்ளிக் கெண்டை மீன்கள் தாவர மிதவைகளையும் உணவாக எடுத்துக் கொள்கின்றன.

** ரோகு மீன்கள் இவை இரண்டையுமே உணவாக எடுத்துக் கொள்கின்றன.

** புல் கெண்டை மீன்கள் குளத்தில் உள்ள சிறு புற்களை அதிகமாக உண்டு, அவற்றில் செரிக்காதவற்றை வெளியே துப்பும் பழக்கம் கொண்டவை.

** இப்படி வெளியே துப்பப்படும் உணவை மிர்கால் மற்றும் சாதா கெண்டை மீன்கள் சாப்பிட்டுவிடும். அதனால், இந்த ஆறு ரகங்களையும் கலந்து வளர்க்கும்போது தீவனம் வீணாகாமல் தடுக்கப்படும்.

 

 

 

 

 

 

 

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
Share on google
Google+
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories