ஒரு மாத வயதுஉடைய குஞ்சுகளாக வாங்கி விட வேண்டும். இதற்கும் குறைவான வயதுடைய குஞ்சுகளை விட்டாலும் சேதாரம் அதிகமாக இருக்கும். ஒரே அளவுள்ள குஞ்சுகளாக விடுவதும் முக்கியம். பெரியக் குஞ்சுகள் சிறியக் குஞ்சுகளைத் தின்றுவிடும்.
தீவன மேலாண்மை
மீன்களுக்கு குருணை வடிவிலான சரிவிகித உணவு கடைகளில் கிடைக்கிறது .பிண்ணாக்கை தீவனமா கொடுப்பதைவிட செலவும் குறைவாக இருக்கும். ஒரு மீனுக்கு அதன் உடல் எடையின் அளவில் 2 முதல் 5 சதவீத அளவுக்கு தினமும் உணவு கொடுத்தால் போதும். மாதத்திற்கும் ஒரு முறை சிரிது மீன்களை பிடித்துஅவற்றின் எடையை தெரிந்து கொள்ள வேண்டும்.
ஒரு நாளுக்கான தீவனத்தை மொத்தமாகக் கொடுக்காமல் ,இரண்டாகப் பிரித்து காலை மற்றும் மாலை என இரண்டு வேளைகளிலும் கொடுக்க வேண்டும் .இடத்தையும் நேரத்தையும் மாற்றக்கூடாதுதினமும் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் தீவனத்தை அளிக்க வேண்டும்.
பாதுகாப்பு முறைகள்
மீன்களைப் பெரும்பாலும் நோய்கள் தாக்குவதில்லை. நீர் மற்றும் தீவனம் சரியாக பராமரித்தாலே போதும்.
விற்பனை
ஆறு மாதம் வளர்ந்த நிலையில் ஒரு மீன் சராசரியாக ஒரு கிலோ எடை இருக்கும். அந்த நிலையிலிருந்து விற்பனை செய்யலாம். இதனை வியாபாரிகள் நேரடியாக வந்து வாங்கி கொள்வார்.