முயலின் சினைப்பருவம் எப்படி அறியலாம்?

எந்த மாதத்தில் சர்க்கரை வள்ளிக்கிழங்கை சாகுபடி செய்யலாம்? அதன் ரகங்கள் என்ன?

சக்கரவள்ளி கிழங்கு நீர் வசதியுள்ள இடத்தில் ஜூன் -ஜூலை மாதங்களில் மற்ற இடங்களில் செப்டம்பர் -அக்டோபர் மாதங்களில் சாகுபடி செய்யலாம்.

சக்கரவள்ளி கிழங்கு பி எஸ் பி உள்ளூர், முசிறி தண்டல் ,எஸ் பி 4,எஸ் பி 13, எஸ்பி 18 மற்றும் கோ-1 கோ-2 கோ-3 கோபி சி ஐ பி 1 போன்ற ரகங்கள் உள்ளன.

வெங்காய நாற்றுக்களை எப்படி உற்பத்தி செய்ய வேண்டும்?

ஒரு ஏக்கருக்கு வெங்காய நாற்று உற்பத்தி செய்ய 2.5 சென்ட் நாற்றங்கால் தேவைப்படும். உயிரி உரத்துடன் விதை நேர்த்தி செய்யப்பட்ட 2.5 கிலோ விதை யை பரவலாக விதைக்க வேண்டும்.

இவ்வாறு விதைத்த விதைகள் 40 முதல் 45 நாட்களில் செழுமையான நாற்றுகளாக தயாராகிவிடும். பிறகு அதை பிடுங்கி சாகுபடி செய்யும் வயலில் நடவு செய்யலாம்.

அகத்தி மற்றும் முருங்கை மரங்களை பூச்சி தாக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

முருங்கை மற்றும் அகத்தியை கீரைக்காக நடவு செய்யும் போது இரண்டடி இடைவெளியில் நடவு செய்யலாம். அகத்தியை ஒன்றை அடியிலும் நடவு செய்யலாம்.

இந்த மரங்களுக்கிடையே 20 அடிக்கு ஒரு ஆமணக்குச் செடி, 5 அடிக்கு ஒரு சாமந்தியும் நடவு செய்வதன் மூலம் பூச்சித் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்.

திருந்திய கேழ்வரகு சாகுபடி என்றால் என்ன?

திருந்திய கேழ்வரகு சாகுபடி என்பது அதிகமான அளவு இயற்கை உரங்களை பயன்படுத்தி குறைந்த அளவு நீரை கொண்டு சாகுபடி செய்யும் முறையாகும்.

இந்த சாகுபடி முறையில் கேழ்வரகு செடிகளில் அதிக வேர்களை கொண்ட தூர்கள் உருவாகி அதிக மணிகளை கொண்ட கதிர்களை உற்பத்தி செய்கிறது. இதனால் அதிக மகசூல் கிடைக்கிறது.

முயலின் சினைப்பருவம் எப்படி அறியலாம்?

பெண் முயலின் பிறப்பு உறுப்பு சிவந்து தடுத்து இருப்பதை வைத்து பருவம் அடைந்து உள்ளது என அறிந்து கொள்ளலாம். அந்த சூழ்நிலையில் பெண் முயலை ஆண் முயல் இருக்கும் கூட்டுக்குள் விட வேண்டும்.

இவ்வாறு இன பெருக்கத்திற்கு சேர்த்த 15 நாட்களுக்குப் பிறகு பெண் முயலின் அடி வயிற்றைத் தடவிப் பார்த்தால் குட்டி இருப்பதை உணர முடியும்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories