முயல்களுக்கு குரல்வளையை வீக்கம் எப்படி ஏற்படுகிறது?

 

தொல்லுயிர் கரைசல் எப்படி தயாரிப்பது?

முதலில் 5 கிலோ புதிய சாணம், மூன்று அரை கிலோ நாட்டுச்சக்கரை, 25 கிராம் கடுக்காய் தூள் மற்றும் 2 கிராம் அதிமதுரப் பொடியை ஆகியவற்றையும் 50
லிட்டர் பிளாஸ்டிக் கேனில் எடுத்து அரை லிட்டர் நீர் ஊற்றி கரைத்து மூடி வைக்க வேண்டும்.

இரண்டு நாட்களுக்கு ஒருமுறை அவ்வப்போது மூடியைத் திறந்து மூடவும் இந்த கரைசலை 10 நாட்களுக்கு பிறகு எடுத்து பயிருக்கு பயன்படுத்தலாம்.

வாழையை பயிர் செய்ய நிலத்தை எப்படி தயார் செய்ய வேண்டும்?

வாழையை நடவு செய்யும் முன் நிலத்தில் சணப்பை ,தக்கைப்பூண்டு போன்ற பசுந்தாள் உரங்களை பயிரிட்டு பூக்கும் சமயத்தில் மடக்கி உழ வேண்டும் .பிறகு நிலத்தை இரண்டு முறை உழுது பிறகு கடைசி உழவிற்கு முன்பு ஏக்கருக்கு 8 டன் தொழு உரமிட்டு நன்கு உழவேண்டும்.

தென்னையில் வரும் கரும் பூஞ்சாண நோயை எப்படி கட்டுப்படுத்தலாம்?

தென்னையில் கரும் பூஞ்சாண நோய் தத்துப்பூச்சியின் மூலம் பரவுகிறது. மேலும் இவை தென்னை ஓலையின் மீது கருப்பு நிறத்தில் பூஞ்சாண உருவாகின்றது.
இதனைக் கட்டுப்படுத்த ஒரு லிட்டர் தண்ணீரில் 25 கிராம் என்ற அளவில் மைதா மாவைக் கரைத்து இலைகளின் மேல் பகுதியில் நன்கு நனையும்படி தெளிக்க வேண்டும்.

பயிர்களில் பூச்சி தாக்குதல் ஏற்பட என்ன காரணம்?

விதை நேர்த்தி பணிகளை முறையாக செய்யாமல் விட்டு விட்டால், தட்ப வெப்பநிலை மாற்றங்கள் காரணமாகவும், காற்று மற்றும் நீர் மூலமாகவும் பயிர்களை பூச்சிகள் பெருமளவுக்குத் தாக்கி சேதப் படுத்துகின்றன.

முயல்களுக்கு குரல்வளையை வீக்கம் எப்படி ஏற்படுகிறது?

இரண்டு காரணங்களால் முயல்களுக்கு குரல்வளை வீக்கம் ஏற்படுகிறது.

சுகாதாரம் பராமரிப்பு ஆகியவற்றில் தேவைகளுக்கு இணங்காத நிலையில் ,லாரிங்கிடிஸ் என்ற குரல்வளை வீக்கம் ஏற்படுகிறது.

கொடுக்கப்படும் தீவனங்களின் சமநிலையற்ற உணவு மூலமும்பாருங்கிட்ஸ் குரல்வளை வீக்கம் ஏற்படுகிறது.
————————————-

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories