கொய்யாவில் கருப்பு புள்ளிகள் அதிகம் விழுகிறது. அதை எவ்வாறு சரி செய்யலாம்?
கொய்யாவில் வரும் கரும்புள்ளிகளை போக்குவதற்கு கற்பூர கரைசல் தெளித்து விடலாம் .மேலும் செடிகளுக்கு வேப்பம் புண்ணாக்கை கொடுத்து வரலாம்.
முயல் வளர்க்க கடைபிடிக்க வேண்டிய தீவன முறைகள் என்ன?
முயலுக்கு அருகம்புல் ,வேலிமசால், அகத்தி ,மல்பெரி இலைகள் ,தட்டை சோளம் ஆகிய பசுந்தீவனங்களையும் அடர் தீவனங்களையும் அளிக்கலாம்.
மேலும் பருவமடைந்த முயலுக்கு தினமும் 250 கிராம் பசுந்தீவனமும் 100 கிராம் அடர் தீவனமும் கொடுக்க வேண்டும்.
குட்டி ஈன்ற முயலுக்கு தினமும் 150 கிராம் அடர் தீவனமும் 250 கிராம் பசுந்தீவனமும் கொடுக்க வேண்டும். குட்டிகளுக்கு 50 கிராம் அடர் தீவனமும் 100 கிராம் பசுந்தீவனமும் கொடுக்க வேண்டும்.
நெல் மகசூலை அதிகரிக்க என்ன உரம் கொடுக்க வேண்டும்?
நெல் நடவு செய்யும் வயலுக்கு அடியுரமாக ஏக்கருக்கு 10 டன் தொழு உரம் அல்லது 2 டன் மண்புழு உரம் இடலாம் .நிலத்தை தயார் செய்யும் முன்பு பசுந்தாள் விதைகளை விதைத்து அவை வளர்ந்த பிறகு மடக்கி உழ வேண்டும்.
தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு அமிர்தகரைசலை வாரம் ஒரு முறை பாசன நீரில் கலந்து விடுவதால் அனைத்து சத்துக்களும் பயிர்களுக்கு கிடைக்கும் .இதனால் நல்ல மகசூல் கிடைக்கும்.
கற்பூர கரைசல் பயன்படுத்தும் போது பூச்சி தாக்குதலை குறைக்கலாம்.
எலுமிச்சை மரத்தில் இலை சுருட்டுப்புழு உள்ளது .அதை தடுக்கும் வழிமுறைகள் யாவை?
வேப்ப எண்ணை ஒரு லிட்டர், புங்கன் எண்ணெய் ஒரு லிட்டர் ,கோமியம் பழையது 10 லிட்டர் காதி சோப்பு கரைசல் அரை லிட்டர் இவை அனைத்தையும் கலந்து வைத்து ஒருநாள் கழித்து எலுமிச்சை மர இலைகளின் மீது தெளித்தால் இலைச் சுருட்டுப் புழுவை கட்டுப்படுத்தலாம்.
வெள்ளை முள்ளங்கியில் நூற்புழுக்கள் கட்டுப்படுத்துவது எப்படி?
வேப்பங்கொட்டைச் சாறு தெளிப்பதன் மூலமும் நூர் புழுக்களை கட்டுப்படுத்தலாம்.
தசகாவ்யா கரைசலை தெளிப்பதால் நூர் பொருட்களை கட்டுப்படுத்தலாம்.
மாடுகளுக்கு பால் உற்பத்தி அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?
மக்காச்சோளம் 5 கிலோ ,கம்பு ஒரு கிலோ, கேழ்வரகு 3 கிலோ,பாசிப்பயறு ஒரு கிலோ ஆகியவற்றை ஊறவைத்து அரைத்து மாடுகளுக்குக் கொடுத்தால் 50 கிராம் முதல் 1 கிலோ வரை பால் உற்பத்தியை அதிகரிக்கலாம்.