முயல் வளர்ப்பு லாபகரமானத் தொழிலாக இருக்கிறது

”கேரளா மாநிலத்தில் முயல் வளர்ப்பு லாபகரமானத் தொழிலாக இருக்கிறது என்று கேள்விப்பட்டேன். அதை தமிழ்நாட்டில் லாபகரமாக செய்ய முடியாதா?”
கேரளா மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் முயல் பண்ணை நடத்தி வருபவரும், முயல் வளர்ப்பில் முனைவர் பட்டம் பெற்றவருமான டாக்டர். மிக்தாத் பதில் சொல்கிறார்.

”கேரள மாநிலத்தில் முயல் வளர்ப்புக்கேற்ற சீதோஷ்ண நிலை நிலவுவதால், அங்கு அதிகளவில் முயல் பண்ணைகள் உள்ளன. தவிர, அங்கு இறைச்சித் தேவைக்காகவும் முயல் வளர்க்கப்படுகிறது. அதோடு, முயல் பண்ணை வைத்திருப்பவர்களே இறைச்சியையும் விற்பனை செய்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் முயல் இறைச்சி அவ்வளவாக பிரபலமாகவில்லை. வீட்டில் அழகுக்குகாக முயல் வளர்ப்பதைத்தான் பெரும்பாலானோர் விரும்புகிறார்கள். தேவை குறைவாக இருப்பதால், தமிழ்நாட்டில் பண்ணைக்கான வாய்ப்புகளும் குறைவாகத்தான் இருக்கிறது. கேரளாவில் உயிர் எடைக்கு கிலோ 140 ரூபாய் என கேரள வியாபாரிகள் கொள்முதல் செய்கிறார்கள். இதுபோல விற்பனை செய்ய வாய்ப்பு இருக்கும்பட்சத்தில், தமிழகத்திலும் முயல் வளர்ப்பில் இறங்கலாம்.

 

 

 

வெப்ப நிலை 35 டிகிரி செல்சியஸுக்கு கீழே உள்ள பகுதிகள்தான் முயல் வளர்ப்புக்கு ஏற்றவை. குட்டி முயல்களுக்கு அரிசிக் கஞ்சி கொடுத்தால், கொழுகொழுவென வளரும். ஆனால், வளர்ந்த முயல்களுக்கு அதைக் கொடுக்கும்போது சினை பிடிப்பதில் பிரச்னைகள் வரும். அதனால், குதிரைமசால், தவிடு… போன்றவற்றைத் தீவனமாகக் கொடுக்க வேண்டியிருக்கும். இதுபோன்ற சின்னச்சின்ன விஷயங்களைக் கவனித்தால் லாபகரமாக முயல் பண்ணையை நடத்த முடியும். பண்ணை தொடங்க விரும்புபவர்கள் எங்கள் பண்ணைக்கு வந்து பார்வையிடலாம். தொழில்நுட்பங்களைச் சொல்லித்தரவும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.”

தொடர்புக்கு :
Dr.Migdad,
Ashiyana rabbit farm,
Tirur – 676107,Kerala,
India. 098952-97205,
0494-2429205

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories