முயல்களை கிராமப் புறங்களிலும் நகர்ப்புறங்களிலும் எளிதாக வளர்க்கலாம் .இறைச்சி உற்பத்தியை அதிகரிக்க முயல் வளர்ப்பு மிகவும் ஏற்ற பண்ணைத் தொழிலாகும். முயல்கள் தோலுக்காகவும் இறைச்சி மற்றும் உரோமத்திற்காகவும் வளர்க்கலாம். சாதாரண தீவனத்தை உண்டு சிறந்த இறைச்சியாக மாற்றும் தன்மை முயலுக்கு உண்டு.
முயல் வளர்ப்பின் நன்மைகள்
முயல்கள் அதிகளவில் இனவிருத்தி செய்யும் தன்மையுடையது.
அனைத்துவிதமான தீவனங்களை அதிகளவில் உணவாக எடுத்துக் கொள்வதால் சிறிய தொகையை முதலீடு செய்தாலே போதும்.
குறுகி காலத்தில் லாபம் கிடைக்கப்பெறும். அதாவது முயல் வளர்ப்பு ஆரம்பித்த 6 மாதத்திலிருந்து லாபம் பெறலாம்.
ரோமம்மட்டுமல்ல எருவில் இருந்து வருமானம் கிடைக்கிறது.
முயல் இனங்கள்
இமாலயன் வகை
சோவியத் சின்சில்லா
டச்சு வகை
ஆல்பினோ வகை
நியூசிலாந்து வெள்ளை
நியூசிலாந்து சிவப்பு
கலிபோர்னியா
வெள்ளை ஜெயண்ட்
சாம்பல் நிற ஜெயிண்ட்
பிளமி ஸ் ஜெயண்ட்
ரஷ்ய அங்கோரா
பிரிட்டிஷ் அங்கோரா
ஜெர்மன் அங்கோர
வளர்ப்புக்குத் தேவையான இனங்கள்
முதலில் முயல் வளர்ப்புக்கு ஏற்ற நல்ல முயல்களைத் தேர்வு செய்யவேண்டும் .பொருளாதார பலன்களை அதிகளவில் பெறத் தகுந்த இனங்களை ( வெள்ளை ஜெயண்ட் , சாம்பல் ஜெயண்ட், நியூசிலாந்து வெள்ளை மற்றும் அங்கோரா இனங்கள்) தேர்வு செய்ய வேண்டும்.
இவற்றில் அங்கோரா இன முயல்களை வெப்பம் குறைந்த( 15 முதல் 20 டிகிரி செல்சியஸ்) மலைப்பிரதேசங்களில் மட்டுமே வளர்க்க வேண்டும்.
இங்கிலாந்து வெள்ளை , வெள்ளை ஜெயண்ட், சாம்பல் ஜெயண்ட், நியூசீலாந்து வெள்ளை மற்றும் கருப்பு டச்சு,சோவியத் சின்சில்லா , உள்ளிட்ட முயல்களை பண்ணைகளில் வளர்க்க முன்னுரிமை கொடுக்கலாம்.
இனப்பெருக்கம் செய்ய பயன்படும் ஆண் மற்றும் பெண் முயல்களை வெவ்வேறு இனமாகவும் ஒரு வருடத்திற்கு குறைவாகவும் எந்த குறைபாடும் இல்லாத முயல்களை தேர்வு செய்ய வேண்டும்.