மணிலாவில் வேரழுகல் நோயை கட்டுப்படுத்த ஏக்கருக்கு சூடோமோனாஸ் ஒரு கிலோவின் 20 கிலோ நன்கு மக்கிய தொழு உரத்துடன்அல்லது மணலுடன் கலந்து இடலாம்.
நோய் தென்படும் இடங்களில் ஜீவாமிர்தக் கரைசலைத் தெளிக்கலாம் மேலும் ஜீவாமிர்தக் கரைசலைக் கொண்டு விதை நேர்த்தி செய்து அதன் பிறகு விதைக்கலாம்.
செம்பருத்தியில் வெள்ளை பூச்சியின் தாக்கத்தைத் எவ்வாறு சரி செய்யலாம்?
ஒரு மீட்டர் நீளம் உள்ள துணியை பத்து துண்டுகளாக வெட்டி அதை மஞ்சள் தூள் சேர்த்து ஊற வைத்து பிறகு காய வைக்கவும்
பிறகு அதை மீண்டும் ஆமணக்கு எண்ணெயில் ஊறவைத்து வயலில் பல்வேறு இடங்களில் கட்டவேண்டும்.
அதன் கீழே விளக்கை வைத்தான் சாறு உறிஞ்சும் பூச்சிகளான வெள்ளை பூச்சி போன்றவைகளை கட்டுப்படுத்தலாம்.
அரளி விதையை தண்ணீரில் ஊறவைத்து வடிகட்டி தெளித்தால் வெள்ளை பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தலாம்.
சோளத்தில் பூச்சி தாக்குதலுக்கு இயற்கையாக என்ன மருந்து கொடுக்கலாம்?
வேப்பங்கொட்டையை வசம்புடன் சேர்த்து தூளாக்கி இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து பிறகு வடிகட்டி பயிருக்கு மறுநாள் தெளித்தால் எல்லாவிதமான பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தலாம்.
வயல்களில் நாற்றுகள் நன்றாக வளர்வதற்கு என்ன இயற்கை உரங்கள் போடலாம்?
டிரைகோடெர்மா அல்லது சூடோமோனாஸ் மற்றும் பீஜாமிர்தம் கரைசல் கொண்டு விதை நேர்த்தி செய்த பிறகு விதைக்கலாம்.
ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 கிராம் சூடோமோனஸ் கலந்து செடியின் மீது தெளிக்கலாம்.
பிரம்மாஸ்திரம் கரைசலைத் தெளிக்கலாம் அல்லது வேப்பங்கொட்டைச் சாறு தெளிக்கலாம் இவற்றை தெளிப்பதன் மூலம் வயல்களில் நாற்றுகள் நன்றாக வளரும்.
முயல் வளர்ப்பில் கடைபிடிக்கவேண்டிய தீவன முறைகள் என்னென்ன?
முயலுக்கு அருகம்புல் வேலிமசால் அகத்தி மல்பெரி இலைகள் தட்டை சோளம் ஆகியவற்றை பசுந்தீவனம் ஆக கடையில் கிடைக்கும் அடர் தீவனங்களையும் அளிக்கலாம்.
மேலும் பருவம் அடைந்த முயலுக்கு தினமும் 250 கிராம் பசுந்தீவனமும் 100 கிராம் அடர் தீவனமும் கொடுக்க வேண்டும்.
குட்டி ஈன்ற முயலுக்கு தினமும் 150 கிராம் அடர் தீவனமும் 250 கிராம் பசுந்தீவனமும் கொடுக்க வேண்டும் குட்டிகளுக்கு 50 கிராம் அடர் தீவனமும் 100 கிராம் பசுந்தீவனமும் கொடுக்க வேண்டும்.