அதிக மானியம் தரும் மூலிகை சாகுபடி….

இந்தியாவில் மூலிகையின் தேவை அதிகரிக்கும் அளவு மூலிகை உற்பத்தியானது இல்லை. 90% மேல் கம்பெனிகளின் தேவையானது இயற்கையாக காணப்படும் மூலிகைகளை சேகரித்து அனுப்புவதன் மூலம் நிவர்த்தி செய்யப்படுகிறது.

எனவே மூலிகை பயிரிடுதல் மிகவும் குறைவாகவே காணப்படுகிறது. ஆகையால் மூலிகைப் பாதுகாப்பு மற்றும் அதன் தேவைகளைக் கருத்தில் கொண்டு தேசிய மூலிகைப் பயிர் வாரியமானது 57 தாவரங்களைப் பயிரிடுவதற்கு மானியம் வழங்கி ஊக்குவிக்கிறது.
இவ்வாரியமானது அழிந்து வரும் அரிதான மூலிகைகளை பயிரிடுவதற்கு 75%ம், உற்பத்தி குறைந்து வரும் நீண்ட காலப் பயிர்களுக்கு 50% மும் மற்ற மூலிகைகளுக்கு 20%ம் மானியம் வழங்குகிறது. மானியத்தை தனி விவசாயியாக அல்லாமல் குழுவாக செயல்பட்டால் பெறுதல் எளிதாகும். தமிழ்நாட்டின் தட்பவெப்ப நிலையில் நன்கு வளரும் மூலிகைகள் மற்றும் அதனை 1 எக்டேரில் சாகுபடி செய்ய மூலிகைப் பயிர் வாரியத்தால் பரிந்துரைக்கப்பட்டுள்ள மானியத்தைக் காண்போம்

. வசம்பு- 20%, சோற்றுக்கற்றாழை-20%, பேரரத்தை – 20%, சித்தரத்தை -20%, தண்ணீர்விட்டான் கிழங்கு – 20%, வேம்பு – 20%, நீர் பிரம்மி – 20%, சாரணத்தி – 20%, சென்னா (அ) அவுரி – 20%, நித்திய கல்யாணி – 20%, வல்லாரை -20%, சங்குபுஸ்பம் -20%, மாகாளி – 20%, வாவிலங்கம் -20%, நெல்லி -20%, சிறுகுறிஞ்சான் – 20%, நன்னாரி -20%, கச்சோலம் -20%, பூனைக்காலி -20%, துளசி-20%, கீழாநெல்லி -20%, திப்பிலி -20%, செங்கொடிவேலி-20%, குறுந்தொட்டி-20%, மணத்தக்காளி-20%, சீனித்துளசி-20%, நீர்மருது-20%, தான்றி-20%, கடுக்காய்-20%, சீந்தில் -20%, நொச்சி-20%, வெட்டிவேர்-20%, அமுக்கிரா-20%, வில்வம்-50%, வாகை-50%, மாவிலங்கம்-50%, கண்வலிக்கிழங்கு- 50%, பாலா-50%, கொடிவேலி -50%, வேங்கை-50%, நஞ்சறுப்பான்-50%, சந்தன வேங்கை – 75%, சந்தனம் – 75% குறிப்பு:

விவசாயிகள் மேற்கண்ட மூலிகைகளை பயிரிடுவதற்கு தேர்ந்தெடுக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை.

1. சந்தைப்படுத்த வாய்ப்புள்ள மூலிகைகளை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும். மானியத்தைக் கருத்தில் கொண்டு சாகுபடி செய்யக்கூடாது.சிறந்த மூலிகைக் கம்பெனிகளுடன் ஒப்பந்த சாகுபடியை மேற்கொள்வது நல்லது.

2. இடவசதி மற்றும் நீர் வசதியைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

3. தரமான விதைகளை தேர்வு செய்வது மிகவும் முக்கியம்.

4. சாகுபடி முறை, அறுவடை முறை, பதப்படுத்தும் முறை மற்றும் செலவினங்களை மூலிகைகளை தேர்வு செய்யும் முன் அறிந்து கொள்வது அவசியமாகும்.

 

 

 

 

 

 

 

 

 

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
Share on google
Google+
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories