அவுரி மூலிகை செடி சாகுபடி

அவுரி
முறைகள்
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

அவுரி

  1. “அவுரி’ என்னும் மருத்துவ குணம் கொண்ட மூலிகை செடிகளை ஊடு பயிராக பயிரிட்டு ஆண்டுதோறும் ரூ. 25 ஆயிரம் வரை சத்தமில்லாமல் வருவாய் ஈட்டலாம்.
  2. தூத்துக்குடி சென்னா என்றழைக்கப்படும் இந்த மூலிகைச் செடிகள் 90 நாட்கள் பயிராகும். ஆண்டுதோறும் பருவ மழையை ஒட்டி நவம்பர் இறுதியில் விதைள் விதைக்கப்படுவது வழக்கம். எக்டேருக்கு 20 கிலோ விதை விதைத்தால் போதுமானது.
  3. களை எடுப்பு மற்றும் உரம் போட தேவையில்லை. அதுவாகவே வளர்ந்து பயன்தரக் கூடியது.

முறைகள்

  1. செடிகள் முழுவதும் மஞ்சள் நிறத்தில் பூ பூத்து, காய்கள் கொத்து கொத்தாக காய்த்து தொங்கும்.
  2. மல்லிகைக்கு ஊடு பயிராக இந்த “அவுரி’யை பயிரிட்டுள்ளேன். வறட்சியை தாங்கி விளையக்கூடியது. குறைந்த அளவே தண்ணீர் போதுமானது.
  3. எக்டேருக்கு ஒரு டன் வரை காய்ந்த இலைகள் மற்றும் காய்கள் கிடைக்கும். இவற்றை மொத்தமாக சேகரித்து தூத்துக்குடி மொத்த வியாபாரிகளிடம் விற்று விடுவேன். இதனால், விவசாய செலவு போக ஆண்டு தோறும் குறைந்தது 25 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் கிடைக்கும்

 

 

 

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

1. அவுரியில் வெளியிடப்பட்ட இரகங்கள் என்னென்ன?

அவரியில் கே கே எம் செ 1 மற்றும் ஏ.எல்.எஃப் டி 2 ஆகிய இரண்டு இரகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் கே கே எம் செ 1 தமிழகத்தில் செய்ய ஏற்ற இரகமாகும்.

2. ஒரு எக்டரில் சாகுபடி செய்வதற்கு எவ்வளவு அவுரி விதைகள் தேவைப்படுகின்றன?

ஒரு எக்டருக்கு சுமார் 15 முதல் 20 கிலோ அவுரி வதைகள் தேவைப்படுகின்றது.

3. அவுரி சாகுபடிக்கேற்ற பருவம் எது?

அவுரியை பிப்ரவரி – மார்ச் மற்றும் ஜீன்-ஜீலை மாதங்களில் சாகுபடி செய்யலாம்.

4. அவுரி சாகுபடிக்கு எவ்வளவு உரம் தேவைப்படுகின்றது செயற்கை உரங்கள் ஏதும் இட வேண்டுமா?

ஒரு எக்டருக்கு 10-15 டன் மட்கிய தொழுவுரம் மற்றும் முறையே 25, 25 மற்றும் 40 கிலோ தழை, மணி மற்றும் சாம்பல் சத்தினை இடவேண்டும். தழைச்சத்தினை இரண்டு பிரிவுகளாக பிரித்து விதைத்த 40 மற்றும் 80வது நாட்களில் இடவேண்டும். அவுரியின் செயற்பாடு, அங்கக மற்றும் செயற்கை உரங்களை இணைந்து அளிக்கும்போது மேம்படுகின்றது.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories