கீழாநெல்லி ஒரு மருத்துவ குணமுடைய செடி ஆகும். செடி முழுவதும் மருத்துவ பயன்பாடு உடையதாகும்.
இது வெப்பமண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடியினை சேர்ந்தது .இந்தியாவின் எல்லா பகுதிகளிலும் காணப்படுகிறது. சுமார் ஒரு அடி உயரம் வரை வளரும் ஒரு வருட தாவரமாகும்.
இதன் இலையின் அடி காம்பில் வரிசையாக காய்கள் காய்ப்பதால் கீழ்காய்நெல்லி என தமிழர் பெயரிட்டு அழைத்தனர் .பேச்சு வழக்கில் கீழ்வாய் நெல்லி, கீழா நெல்லி, கீட்கா நெல்லி எனவும் அழைக்கப்படுகிறது.
ஆதி காலத்தில் தமிழர் மருத்துவத்தில் மஞ்சகாமாலை நோய்க்கு இந்த மூலிகையை பயன்படுத்தி வந்துள்ளார்கள்.
இந்தியாவில்நூற்றுக்கும் மேற்பட்டஆய்வுக் கூடம் இம்மூலிகை பல்வேறு விதங்களில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.