தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் துளசி இலையை சாப்பிட்டு வந்தால் அவை இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி இதய நோய் வரும் அபாயத்தை குறைக்கிறது.
துளசி இலையை எலுமிச்சை சாறு விட்டு நன்கு மை போல் அரைத்து அந்த விழுதை தோலில் தடவி வந்தால் நாள்பட்ட சொறி படை சிரங்கு ஆகியவை மறைந்து விடும்.
துளசி இலையை சாறு எடுத்து அதில் சிறிது தேன் சேர்த்து கலந்து குடித்து வந்தால் சிறுநீரக கற்கள் மற்றும் சிறுநீரக பாதையில் ஏதேனும் தொற்று இருந்தால் குணமாகும்.
வெட்டுக் காயங்களுக்கு துளசி இலைச் சாற்றை பூசி வந்தால் அவை விரைவில் குணமாகும்.
துளசி இலையைப் போட்டு ஊற வைத்த நீரை தொடர்ந்து பருகி வந்தால் நீரழிவு வியாதி உடலை நெருங்காது.
துளசி இலைகளை தினமும் உண்டு வந்தால் குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்னைகள் வாழ்நாள் முழுவதும் வராது.