அகத்திக்கீரையின் மருத்துவக் குறிப்புகள்
அகத்திக் கீரையை வரப்புப்பயிராகவும் தடுப்புப்பயிராகவும் எல்லாவிதமான பயிர்களிலும் சாகுபடி செய்யலாம் இவற்றை கால்நடைகளுக்கு தீவனமாகவும் பயன்படுத்தலாம். அதுமட்டுமல்லாமல் தழைச்சத்தாகவும் பயன்படுகிறது அனைத்து மருத்துவக்குணமும் நிறைந்து காணப்படும்.
அகத்திக்கீரையின் மருத்துவக் குறிப்புகள்
அடிப்பட்டு ரத்தம் நிற்காமல் வழியும் போது அகத்திக்கீரையின்
இலைகளை அரைத்துக் கட்டி புண் ஆறும். சீழ் பிடிக்காது.
அகத்திக் கீரைச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால்
வயிற்றுவலி குணமாகும்.
அகத்திக் கீரையுடன் வெங்;காயம் சேர்த்து பொரித்து
உண்டால் குடலுக்கு வலிமை, நரம்புக்கு புத்துணர்வு
கிடைக்கும். அரிசி கழுவிய நீரில் அகத்திக் கீரை சூப் செய்து
சாப்பிட்டால் கல்லீரல், இதயம், மூளை வலுப்பெறும்.
அதிகாலையில் 2 தேக்கரண்டி அகத்திக்கீரைப்
பொடியினை நீராகாரத்தில் கலக்கி சாப்பிட்டால்
குன்மம் விலகும்.
அகத்திக்கீரை சாற்றில் துணியை நனைத்து 2 நாட்களுக்கு
பற்று போட்டால் புட்டாலம்மை குணமாகும்.
அகத்திக்கீரையை சாம்பாரில் சேர்த்துக் கொண்டால்
பித்தம். கபம், வாதம் குறையும். சிறுநீர் தடையின்றி
பிரியும்.கண்கள் குளிர்ச்சிபெறும்