அன்றாடம் பயன்படுத்திய கிருமிநாசினிகள்

தமிழர் வரலாறு அறிவோம்
அக்ரி.இரா. அரவிந்தன்.
பண்டைய தமிழர்
அன்றாடம்
பயன்படுத்திய
கிருமிநாசினிகள்

நமது பண்டைய தமிழர்கள் கடைபிடித்த வாழ்க்கை முறையானது அவர்களின் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு பெரிதும் வழிவகுத்தது. அவர்கள் பின்பற்றிய அனைத்து பழக்க வழக்கங்களிலும் கண்டிப்பாக ஒரு அறிவியல் சார்ந்த காரணம் இருக்கும்.

அவர்களின் ஆன்மீக செயற்பாடுகளுக்கு பின்னால் கூட அறிவியல் விளக்கம் நிச்சயமாக இருக்கும். அதனையே நாம் தற்போது தெரிந்தும் தெரியாமலும் பயன்படுத்திவருகிறோம்.

எனினும் நாம் எப்போதாவது செய்யும் விடயங்களை அவர்கள் தமது அன்றாட வாழ்க்கையில் தொடர்ந்து செய்துவந்தமையால் தான் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்ந்துள்ளார்கள்.

நம் முன்னோர் வீட்டையும் வீட்டு சூழலையும் கிருமிகளிலிருந்து பாதுகாத்துக்கொள்ள தினமும் என்ன பொருட்களை பயன்படுத்தினார்கள்
என்று பார்க்கலாம்.

1.மாட்டுச் சாணம்

அக்காலத்தில் நமது பெரும்பாலான முன்னோர்கள் கால்நடை வளர்ப்பில் ஈடுப்பட்டிருந்தார்கள். அவற்றில் மாடுகளுக்கு ஒரு முக்கியத்துவம் இருந்தது.

மனிதனின் ஆரோக்கியமான வாழ்க்கைக்கும் ஆன்மீகத்திற்கும் மாடுகள் பங்களிப்பு அதிகமாக இருந்தமையே இதற்கு காரணம்.

அக்காலத்தில் அனைத்து மண் வீடுகளுமே மாட்டுச் சாணத்தால் மெழுகப்பட்டிருக்கும். இதனால் அவ்வீடு முழுமையாக கிருமிகளிலிருந்து பாதுகாக்கப்பட்டிருக்கும்

ஏனெனில் மாட்டுச் சாணம் ஒரு சிறந்த கிருமிநாசினி.

மேலும் தினமும் காலையில் பெண்கள் சாணத்தை நீரில் கரைத்து வீட்டு வாசலில் தெளித்து கோலமிடுவார்கள்.

இவ்வாறு தெளித்திருக்கும் போது நாம் வெறும் காலோடு வீட்டிற்கு வெளியில் இருந்து உள்ளே செல்லும் போது நமது காலில் இருக்கும் அனைத்து கிருமிகளும் மாட்டுச் சாணம் கால் முழுதும் படும் போது இறந்துவிடும்.

இதனால் வீட்டிற்கு உள்ளே கிருமிகளின் தாக்கம் ஒரு போதும் இருக்காது.

எனினும் தற்போது இச்செயற்பாடு மார்கழி மாதத்தில் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது ஒரு கவலைக்குறிய விடயம் என்றே கூறவேண்டும்.

2.மாட்டுக் கோமியம்

முன்பெல்லாம் காலை வேளையில் மாடுகளை வளர்ப்போர் அதன் தொழுவத்தை சுத்தம் செய்வார்கள். அப்போது மாட்டு கோமியம் கலந்த சாணத்தை கைகளிலே எடுத்து சுத்தம் செய்வார்கள்.

இச்சந்தர்ப்பத்தில் கோமியமும் சாணமும் உடம்பில் பல்வேறு இடங்களில் படும். இதன்போது உடம்பில் உள்ள கிருமிகள், முக்கியமாக கைகளில் உள்ள கிருமிகள் இறந்துவிடும்.

சாணம் எவ்வாறு கிருமிநாசினியாக கொள்ளப்படுகிறதோ அதேபோன்று கோமியமும் ஒரு சிறந்த கிருமிநாசினியாகும்.

அத்துடன் முன்னோர்கள் கோமியத்தை வீட்டின் உள்ளே அனைத்து இடங்களிலும் தெளிப்பதுடன் வீட்டை சுற்றியும் தெளிக்கும் வழக்கம் இருந்துவந்துள்ளது.

கிருமிகளிலிருந்து வீடு முற்றிலும் பாதுகாப்பாக இருப்பதற்காகவே இவ்வாறு செய்தார்கள் என்பது அறிவியல் சார்ந்த உண்மையாகும்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories